தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏசு சொன்னதை  நாங்கள் செய்கிறோம் “உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.  

20 Dec 2025, 2:23 pm
ஏசு சொன்னதை  நாங்கள் செய்கிறோம் “உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.  
<p><strong>ஏசு சொன்னதை &nbsp;நாங்கள் செய்கிறோம் &ldquo;உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்</strong>. &nbsp;</p> <p>பசித்தவருக்கு ரொட்டி கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் பசியால் வாடுகிறவர்கள் இல்லை. &nbsp;அறியாமையில் உழல்வோருக்கு அறிவுப் பாதையைத் திறக்கச்சொன்னார் அவர். எங்கள் நாட்டில் &nbsp;எல்லோருக்கும் ஒரே தரமான கல்வியை அர சாங்கமே தன் பொறுப்பில் அளிக்கிறது. &nbsp;நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் யாராக இருந்தாலும் பாகு பாடில்லாமல் உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்கப் &nbsp;படுகிறது. &nbsp;குளிரில் வாடுகிறவர்களுக்குக் கூரை கொடுக்கச் &nbsp;சொன்னார் அவர். எங்கள் நாட்டில் வீடின்றி வீதியில் &nbsp;நிற்போர் ஒருவரையும் காட்ட முடியாது. &nbsp;அடிமைத் தளையிலிருந்து மீட்டு விடுதலை ளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் சுய மரியாதையோடு உழைத்து வாழ்வதற்கென &nbsp;எல்லோருக்கும் வேலை உறுதிப்படுத்தப்பட்டி ருக்கிறது. &nbsp;இதையெல்லாம் கர்த்தரின் பெயரால் செய்யச்சொன்னார் ஏசு. நாங்கள் புரட்சியின் வெற்றி யால் செய்துகொண்டிருக்கிறோம். இறை நம்பிக்கை &nbsp;என்பதில் நாம் விலகி நிற்கலாம். ஆனால் மனிதர்களின் விடுதலை, சமத்துவம், பிணியற்ற வாழ்வு, அறிவொளி வெளிச்சம், சமூக மதிப்பு, இவை நாம் சந்திக்க வேண்டிய புள்ளிகள் &nbsp;அல்லவா? &rdquo; -அமெரிக்காவில் செய்யப்பட்டுவரும் மோச மான பிரச்சாரத்தின் உண்மையை அறியும் நோக்கத் &nbsp;துடன் தன்னைச் சந்தித்த கிறிஸ்துவ பேராயர்கள் குழுவிடம் இப்படிச் சொன்னவர். கியூபா புரட்சி நாயகர் ஃபிடல் காஸ்ட்ரோ.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.