இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்திருக்கிறோம்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்திருக்கிறோம்</strong></p>
<p>அசாமில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கி றது. ஜோர்ஹாட் சட்டமன்றத் தொகு தியில் இருந்து மாநிலக் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் களத்தில் இருக்கி றார். மனுத்தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்தவரிடம், உங்களால் எப்படி தொகுதியில் பிரச்சாரம் செய்ய முடியும்.. மாநிலம் முழுக்கப் பிரச்சாரம் செய்ய வேண்டுமே.. உங்களுக்கு எதிராக ஒரு மூத்த, செல்வாக்குள்ள தலைவ ரை பாஜக நிறுத்தியிருக்கிறதே.. என்று ஊடகவி யலாளர்கள் கேட்டனர். அப்போது அவரோ பதற்றமடையவில்லை. எனக்கென்ன கவலை.. காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இடதுசாரிக் கட்சி களுடன் இணைந்திருக்கிறோம். எங்களுக்காக அவர்கள் களத்தில் நிற்கிறார்கள். பல அமைப்பு கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், தனிநபர் கள், இளைஞர்கள், கலைஞர்களைக் கொண்ட கூட்டணியாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் நகர்ந்தார்.</p>
