சூரல்மலை-முண்டக்கை நகரில் முதல் குடும்பம் குடியேற்றம் பினராயி விஜயன் வாழ்த்து
17 May 2026, 9:40 pm

சூரல்மலை-முண்டக்கை நகரில் முதல் குடும்பம் குடியேற்றம் பினராயி விஜயன் வாழ்த்து

கேரள மாநிலம் வயநாட்டில் சூரல் மலை-முண்டக்கை நிலச்சரி வுப் பேரழிவில் பாதிக்கப்பட்ட வர்களுக்காக, கல்பற்றா எல்ஸ்டன் எஸ்டேட்டில் மாநில அரசால் (இடது ஜன நாயக முன்னணி) கட்டப்பட்ட மாதிரி குடி யிருப்புப் பகுதிக்கு முதல் குடும்பம் குடி யேறி உள்ளது. பேரழிவின் இருண்ட நினைவுகளிலிருந்து விடுபட்டு, நம் பிக்கை நிறைந்த புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ள அந்தக் குடும்பத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித் துள்ளார்.

புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களின் சூழ்நிலைகளை நேரடியாக விசாரிக்கவும் காணொளி அழைப்பு மூலம் அந்தக் குடும்பத்தைத் தொடர்பு கொண்டார். பினராயி விஜயனிடமிருந்து இந்த எதிர்பாராத காணொளி அக்குடும் பத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது. வீட்டிற்கு வந்திருந்த குடும்ப உறுப்பினர்களிடம் புதிய வீட்டின் விவ ரங்களையும், குடியிருப்புப் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அவர் கேட்டறிந்தார். “எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?, புதிய வீட்டில் எல்லா வசதிகளும் உறுதி செய் யப்பட்டுள்ளதா?” என்று பினராயி விஜ யன் பாசத்துடன் விசாரித்தார்.

பேரிடரின் போது எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருந்து, தங்களுக்கு ஒரு பாதுகாப்பான வீட்டையும் வாழ்க்கை யையும் வழங்கியதற்காக, குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு உணர்ச்சிப் பூர்வமாகத் தங்கள் நன்றியைத் தெரி வித்தனர். அவர்கள் அவருக்குக் காணொ ளிக் காட்சி மூலம் அந்த வீட்டின் வரை படங்களைக் காட்டினார்கள். அப்போ தைய முதலமைச்சர் பினராயி விஜயன், மார்ச் 1 அன்று அந்த நகரியத்தின் முதல் கட்டத்தைத் திறந்து வைத்து, பயனாளி களுக்குப் பட்டாக்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. போபால்