வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு : 5 பேர் பலி ; 6 பேர் மாயம்!
7 Jul 2026, 9:39 pm

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு : 5 பேர் பலி ; 6 பேர் மாயம்!

வயநாடு, ஜூலை 7 - கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில், கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக வெளியான முதற்கட்டத் தகவலில், 5 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அனக்கொம்பொயில் - மேப்பாடி சுரங்கச் சாலைப்பணி நடந்து வருகிறது. இதற்காக, கல்லாடி மீனாட்சி பாலம் அருகே சுரங்கப்பாதைக்காகக் கட்டப்பட்டு வந்த கான்கிரீட் சுவர், கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுடன் அங்கு தோண்டி குவித்து வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான மண்ணும், சேறும் பனிச்சரிவு போல சரிந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாக னங்கள், தற்காலிகப் பணிமனைகள் மற்றும் தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள னர். 6 பேர் காணாமல் போயுள்ளனர். காய மடைந்த ஹிரா குமார், திலீப், சூரஜ் யாதவ் உள்ளிட்ட 9 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.