வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
10 Jul 2026, 8:07 pm
<p><strong>வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு</strong></p><p>திருவனந்தபுரம் கேரள மாநிலம் வயநாடு கல்லாடியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரி வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டு மென கேரள உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெய சங்கரன் நம்பியார் மற்றும் பிரீதா ஏ.கே. ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், “வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களு க்கும் அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை எவ்வித தாமதமுமின்றி உடனடி யாக வழங்க வேண்டும். காயமடைந்தவர் களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சிகிச்சைக்கான கட்டணத்தை நோயாளிகளோ அல்லது அவர்க ளது குடும்பத்தினரோ செலுத்த வேண்டிய தில்லை; இந்தச் செலவுகளை மாநில அரசு முத லில் ஏற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூ றாய்வு முடித்து, அவர்களின் சொந்த ஊர்களு க்கு அனுப்பி வைப்பதிலும், குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதிலும் எவ்வித தாமதமும் இருக்கக்கூடாது. இறுதிச்சடங்குகளைச் செய்ய வேண்டியது குடும்பத்தினரின் கடமை என்பதால், இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மழைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுபோன்ற பேரிடர்களைத் தவிர்க்க கூடுதல் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்க வேண்டும்” என உத்தர விட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக, வயநாடு கல்லாடி நிலச்சரிவில் காணாமல் போன மற்றொருவரின் சடலம் மீனாட்சி ஆற்றங்கரையில் வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
