வத்ராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், ஹார்ட் புல்னஸ் அமைப்பு
7 Jun 2026, 10:44 pm
<p>வத்ராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், ஹார்ட் புல்னஸ் அமைப்பு இணைந்து வடுகபட்டி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டத்தினை நடத்தின. இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மரக்கின்றினை நட்டு வைத்தார். தொடர்ந்து 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்று நடும் விழாவை தொடர்ந்து சிறப்பு சுற்றுச்சூழல் சம்பந்தமான கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி செயலர் கலந்து கொண்டனர்.</p>
