முந்தய பக்கம்

சிதம்பரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேக்கம்

24 Nov 2025, 3:26 pm
சிதம்பரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேக்கம்
<p><strong>சிதம்பரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேக்கம்</strong></p> <p>சிதம்பரம், நவ.24- &nbsp;சிதம்பரம் &nbsp;புவனகிரி , சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை &nbsp;எனப் பல பகுதிகளில் மழை அதிகமாக பதிவாகியுள்ளது. மழை நீர் ஒரே நேரத்தில் வடிய முடியாமல், சில குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி யுள்ளது. &nbsp;தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். லால்புரம் ஊராட்சி, தையாக்குப்பம் பகுதியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைக்கப்பட்ட சாலையால் மழைநீர் வடிய வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை உடைத்து தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டது. அதேபோல், சிதம்பரம் நகரத்தை ஒட்டி ஓடும் கான்சாகிப் வாய்க்காலில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. வாய்க்காலில் அடைப்பை ஏற்படுத்தியுள்ள ஆகாயத் தாமரைச் செடிகளைப் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram