தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

27 Dec 2025, 4:49 pm
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
<p><strong>விருதுநகர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்</strong></p> <p>ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.27- விருதுநகர் மாவட்டம் முழு வதும் நீர்நிலைகளை மைய மாகக் கொண்டு வசித்து வரும் பற வைகள் குறித்த ஆண்டு கணக்கெ டுப்பு பணிகள் சனியன்று காலை தொடங்கின. வனத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நீர்நிலைப் பற வைகள் கணக்கெடுப்பு ஞாயி றன்றும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நீர்நிலைகளில் வாழும் பறவை களின் எண்ணிக்கை மற்றும் இன வகைகளை அறிய வனத்துறை கணக்கெடுப்பு நடத்துவது வழக் கம். அந்த வகையில், இந்த ஆண் &nbsp;டுக்கான கணக்கெடுப்பு சனியன்று &nbsp;அதிகாலை முதல் மாவட்டம் முழு வதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் வனத் &nbsp;துறை அலுவலர்கள், பறவை ஆர்வ லர்கள் மற்றும் கல்லூரி மாணவர் &nbsp;கள் இணைந்து பங்கேற்று வரு கின்றனர். விருதுநகர் மாவட்டத் தில் தேர்வு செய்யப்பட்ட கண்மாய் &nbsp;மற்றும் குளங்களில் காலை நேரத் &nbsp;தில் பறவைகள் அதிகம் காணப் படும் நேரத்தை கருத்தில் கொண்டு &nbsp;கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படு கிறது. இதற்காக வனத்துறையினர் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் அதிகாலையிலேயே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு, மேகமலை புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி துணை இயக்குநர் முருகன் உத்தரவின் பேரில் நடை பெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணிகளுக்கான ஏற்பாடுகளை ரேஞ்சர் செல்வமணி தலைமையில் &nbsp;வனத்துறையினர் செய்திருந்தனர். விருதுநகர் மாவட்டம் முழு வதும் சுமார் 25-க்கும் மேற்பட்ட &nbsp;தேர்வு செய்யப்பட்ட கண்மாய் மற் &nbsp;றும் குளங்களில் இந்த நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.