மின்மாற்றிப் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிப்பு! காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்
5 Dec 2025, 4:21 pm
<p><strong>மின்மாற்றிப் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிப்பு! காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்</strong></p>
<p>கடலூர், டிச. 5- விருத்தாசலம் அருகே மின்மாற்றி பழுதானதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப் பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் ஆலிச்சிக்குடி ஊராட்சி யில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் விநியோகம் செய்யும் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் மின் மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்யும் மின்மாற்றி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழு தானது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் ஒரே ஒரு சிறிய குடிநீர்த் தொட்டியை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்சார வாரியத்திற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை யில் குடிநீர் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட போட்டியில் பொதுமக்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரெனக் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் மின்மாற்றியைச் சீரமைத்துக் குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் பலகட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனக் கூறிவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.</p>
