உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
3 Jan 2026, 2:20 pm
<p><strong>உப்பாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு</strong></p>
<p>திருப்பூர், ஜன.3- குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணையிலிருந்து 6 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் சனியன்று தண்ணீர் திறந்து வைக்கப் பட்டது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், உப்பாறு அணையிலிருந்து பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 6,060 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகை யில் சனியன்று தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் மனிஷ் நார ணவரே தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் தண்ணீரை திறந்து வைத்து, மலர்தூவி வரவேற்றனர். இந்நிகழ்வில் அமைச்சர் சாமி நாதன் பேசுகையில், உப்பாறு அணையிலி ருந்து வலது கரை மற்றும் இடது கரை கால்வாய்கள் மூலம் தாராபுரம் வட்டத்திற் குட்பட்ட பாசனப் பகுதிகள் 6060 ஏக்கர் நிலங் கள் பாசனம் பெறும் வகையிலும், பொதுமக் கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் சனியன்று தண்ணீர் திறக் கப்பட்டுள்ளது. ஜன.23 ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, மொத் தம் 173.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட வுள்ளது. வலது கரையில் 72 கனஅடி/வினாடி என்ற அளவிற்கும், இடது கரையில் 105 கன அடி/வினாடி என்ற அளவிற்கும் மொத்த மாக 177 கனஅடி/வினாடி அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. உப்பாறு அணையின் முழு கொள்ளவான 24 அடியில் தற்போது 13.60 அடி நீர்மட்டம் உள்ளது, என்றார். இந்நிகழ்வில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், திருப்பூர் மாநக ராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் பத்மநா பன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியா ளர் கார்த்திகேயன், நீர்வளத்துறை செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி செயற் பொறியாளர்கள் பாபு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
