தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

5 Feb 2026, 3:40 pm
தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
<p><strong>தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு</strong></p> <p>தருமபுரி, பிப்.5- தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, விவசாயப் பாச னத்திற்காக வியாழனன்று தண்ணீர் திறந்து வைக்கப் பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பை யாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, தருமபுரி மாவட்ட &nbsp;ஆயக்கட்டு பகுதிகள் 2,050 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்ட &nbsp;ஆயக்கட்டு பகுதிகள் 3,280 ஏக்கர் என மொத்தம் 5,330 &nbsp;ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறப்பு &nbsp;நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் &nbsp;ரெ.சதீஸ் தண்ணீர் திறந்து வைத்தார். இதன்பின் ஆட்சியர் &nbsp;பேசுகையில், தருமபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர், கம்மம் பட்டி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள செக்காரப்பட்டி, வெள்ளார், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் ஆகிய 6 &nbsp;கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். &nbsp;விவசாயிகள், நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை &nbsp;சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்கு டன் செயல்பட வேண்டும். அறிவிக்கப்பட்ட 4 நனைப்பு மற்றும் 8 நாட்களுக்கு பிறகு எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட மாட்டாது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி.வெங்கடேஸ்வரன், பொதுப்பணித்துறை (நீர் வள ஆதா ரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் கீருபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.