சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு
31 Jan 2026, 5:27 pm
<p><strong>சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு</strong></p>
<p>திருவண்ணாமலை, ஜன.31- திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டில், இடது மற்றும் வலது புறக் கால்வாய்களிலிருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை குடியரசுத் துணைத்தலைவர் (சட்டப் பேரவைத் துணைத்தலைவர்) கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சாத்தனூர் அணையின் முழு நீர்மட்டம் 119.00 அடி மற்றும் முழு கொள்ளளவு 7321 மி.க.அடியாகும். சனிக்கிழமை காலை 10.00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.40 அடியாகவும், கொள்ள ளவு 7186 மி.க.அடியாகவும் இருந்தது. இதை யடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் தண்ணீர் திறந்து வைத்தார். தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த 45,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே விநாடிக்கு 330 கன அடி மற்றும் 220 கன அடி என மொத்தம் 550 கன அடி வீதம் 31.01.2026 முதல் 11.05.2026 வரையிலான 100 நாட்களுக்குத் தண்ணீர் வழங்கப்படும். மேலும், திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு 5,000 ஏக்கர் இரண்டாம் போகச் சாகுபடிக்கு 1,200 மில்லியன் கன அடி நீர் மூன்று தவணைகளில் ஏப்ரல் 30-க்குள் திறந்துவிடப்படும். பாசன நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>
