முந்தய பக்கம்

நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

16 Feb 2026, 2:37 pm
நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
<p><strong>நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு</strong></p> <p>தருமபுரி, பிப்.16- பென்னாகரம் அருகே உள்ள நாகாவதி &nbsp;அணையிலிருந்து திங்களன்று பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணை யிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற் காக பிப்.16 முதல் மே 26 ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு முறை வைத்து தண்ணீர் திறக்க &nbsp;அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது &nbsp;முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், அடுத்த 5 நாட்களுக்கு இரண்டாவது மண்ட லத்திற்கும் தண்ணீர் விட்டு, பின்னர் 5 நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் 7 நனைப்பு களுக்கு 117.91 மில்லியன் கன அடி தண் ணீரை தலைமை மதகின் வழியாக திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, நாகாவதி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது உள்ள தண்ணீர் வரத்தைக் கொண்டும், பென் னாகரம் வட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதிக ளுக்கு பயன்பெறும் வகையில் திங்களன்று &nbsp;மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தண்ணீரை திறந்து வைத்தார். 100 நாட்களுக்கு தண்ணீர் &nbsp;திறந்து விடப்படும் என்பதால், பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅள்ளி, சின்னம் பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்தி லுள்ள 1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். &nbsp;இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பொதுப்பணித்துறை (நீர் வள ஆதா ரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார் மற் றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram