சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு
5 Jan 2026, 6:21 pm
<p><strong>சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு</strong></p>
<p>தருமபுரி, ஜன. 5- பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத் திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், 4,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சின்னாறு நீர்த்தேக்கத் திலிருந்து 2025-26 (பசலி 1435) ஆம் ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் மற்றும் தரு மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் கலந்து கொண்டு, மதகு களை உயர்த்தி தண்ணீரைத் திறந்து வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து ஜன.5 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 140 நாட்க ளுக்கு பாசனத்திற்காகத் தண்ணீர் விடப் படும். பழைய ஆயக்கட்டுப் பகுதியில் உள்ள 5 முக்கிய ஏரிகள் நிரப்பப்படும். பழைய ஆயக்கட்டு மூலம் 2,626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு மூலம் 1,874 ஏக்கர் என மொத்தம் 4,500 ஏக்கர் நிலங் கள் நேரடியாகப் பாசன வசதி பெறும். இந்த நீர் திறப்பின் மூலம் பஞ்சப் பள்ளி, பெரியானூர், போடிகுட்டப் பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்ட அள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசன அள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி மற்றும் பேளாரஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன்பெரும். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சி யர் ரெ.சதீஸ், “தற்போது அணையி லுள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து அதிக விளைச்சலைப் பெற வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியா ளர் கணேஷ், மாரண்டஅள்ளி பேரூ ராட்சித் தலைவர் வெங்கடேசன் மற்றும் முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதி நிதிகள், விவசாய பெருமக்கள் எனத் திர ளானோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
