முந்தய பக்கம்

பிஏபி தொகுப்பு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு

19 Jan 2026, 2:23 pm
பிஏபி தொகுப்பு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு
<p><strong>பிஏபி தொகுப்பு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு</strong></p> <p>உடுமலை, ஜன.19- பிஏபி திட்டத்தில் 4ஆம் மண்டல பாசனத் திற்கு வழங்குவதற்கு திருமூர்த்தி அணைக்கு &nbsp;காண்டூர் கால்வாய் மூலமாக வந்து கொண்டி ருந்த தண்ணீர் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி &nbsp;நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிஏபி காண்டூர் கால்வாயில் பழுதடைந்த இடங்க ளில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் &nbsp;சனிக்கிழமை நிறைவு பெற்றதால், ஜன.18 &nbsp;ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தூணக்க டவு அணையில் இருந்து &nbsp;சர்க்கார்பதி வழி யாக &nbsp;திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். மேலும், &nbsp; சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், படிப்படியாக மின் உற்பத்தி &nbsp;அதிகரிக்கப் பட்டு ஜன.20 ஆம் தேதி முதல் காண்டூர் கால் வாயில் &nbsp;முழு கொள்ளளவு தண்ணீர் எடுப்ப தற்கான நடவடிக்கைகளை நீர்வளத் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். பிஏபி திருமூர்த்தி அணை நீர்த்தேக்கத் திட்டக் குழு, பகிர்மானக் குழு தலைவர்கள் &nbsp;மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டாக &nbsp;ஆலோசனை செய்து, அரசுக்கு பரிந்து ரைத்து, தண்ணீர் திறப்பதற்கான அர சாணை பெற்று இம்மாதம் &nbsp;24 ஆம் தேதி முதல் &nbsp;முதலாம் மண்டல பாசனத்திற்கு ஐந்து சுற்று கள் தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது &nbsp;என்று &nbsp;தமிழ்நாடு தென்னை விவசாயிகள் &nbsp;சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உடுக்கம்பா ளையம் பரமசிவம் தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram