வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
17 Feb 2026, 3:36 pm
<p><strong>வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு</strong></p>
<p>தருமபுரி, பிப்.17- வள்ளிமதுரை கிராமத்திலுள்ள வரட்டாறு நீர்தேக்கத் திலிருந்து 40 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிரா மத்திலுள்ள வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து பிப்.17 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என அரசு தெரி வித்திருந்தது. அதன்படி, செவ்வாயன்று அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களில் பாசனத் திற்காக 5108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் செவ்வாயன்று முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை 40 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் வள்ளிமதுரை, தாதர வலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச் சல்வாடி, சாமநத்தம் புதூர், எல்லப்புடையாம்பட்டி, நாதி யானூர், கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, மாவே ரிப்பட்டி, கம்மாளம்பட்டி மற்றும் செல்லம்பட்டி ஆகிய கிராமங்கள் பயன்பெறும். இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை (நீர் வள ஆதாரம்) உதவி செயற்பொறியா ளர் பார்த்திபன், உதவி பொறியாளர் ஜெயக்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் செம்மலை, அரூர் வட்டாட்சி யர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
