வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
6 Feb 2026, 5:17 pm
<p><strong>வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு</strong></p>
<p>தருமபுரி, பிப்.6- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணி யாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற் காக தண்ணீர் திறக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திருந்து 2025 – 26 ஆம் ஆண்டு, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு விவசாயப் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தண்ணீரை திறந்து வைத் தார். 10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில், வாணியாறு நீர்த்தேக்க திட்ட புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறை யில் வெள்ளியன்று முதல் ஏப்.1 ஆம் தேதி வரை 55 நாட்களுக்கும், மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டின் பாசனத்திற்கும் தண் ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள மோளையானூர், வெங்கடசமுத்திரம், தேவ ராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத் தம், தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அல மேலுபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண் டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். விவசா யத்திற்கு மக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு வலர் இரா.கவிதா, பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில் குமார், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சரவணன், உதவி செயற்பொறியாளர் மோகனப்பிரியா மற்றும் உள்ளாட்சி அமைப் புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.</p>
