தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

18 Jan 2026, 4:50 pm
வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
<p><strong>வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு</strong></p> <p>திருப்பூர், ஜன.18- வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து ஞாயிறன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீரை &nbsp;திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வட்ட மலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. தாராபு ரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் &nbsp;பிரகாஷ் தலைமை வகித்தார். 6,043 ஏக்கர் பாசனம் &nbsp;பெறும் வகையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீரை திறந்து &nbsp;வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி களிலுள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் ஞாயிறன்று முதல் பிப்.7 &nbsp;ஆம் தேதி வரை 20 நாட்களில் உரிய இடைவெளி &nbsp;விட்டு, நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடது பிரதான &nbsp;கால்வாய் வழியாக (நீரிழப்பு உட்பட) 30 மி.க.அடி வீதம் &nbsp;தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதன் மூலம் காங் கயம் வட்டத்திலுள்ள உத்தமபாளையம், வெள்ள கோவில், இலக்குமநாயக்கன்பட்டி, முளையாம் பூண்டி, புதுப்பை ஆகிய கிராமங்களில் நிலங்கள் பாசன வசதி பெறும். நீர்தேக்கத்தின் முழு கொள்ள வான 268.27 மி.க.அடியில் தற்போது 75.89 மி.க.அடி தண்ணீர் உள்ளது, என்றார். இந்நிகழ்வில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்ம நாபன், தலைமைப் பொறியாளர் (நீர்வளத்துறை) முரு கேசன், செயற்பொறியாளர் ரா.சுப்பிரமணியன், உதவி &nbsp;செயற்பொறியாளர்கள் கு.நாட்ராயன், யாழினி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரிதிநிதிகள், பாசன விவ சாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.