தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னைக்கு ‘வாட்டர் மெட்ரோ’ கும்டா அறிக்கை சமர்ப்பிப்பு

14 Nov 2025, 1:26 pm
சென்னைக்கு ‘வாட்டர் மெட்ரோ’ கும்டா அறிக்கை சமர்ப்பிப்பு
<p><strong>சென்னைக்கு &lsquo;வாட்டர் மெட்ரோ&rsquo; கும்டா அறிக்கை சமர்ப்பிப்பு&#39;</strong></p> <p>சென்னை, நவ.14- சென்னையின் வளர்ச்சிக்கு தேவையான பொது போக்குவரத்து வசதிகள் குறித்த ஆய்வறிக்கையை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) அரசிடம் சமர்ப்பித்துள்ளது. 2023 முதல் 2048 வரை 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் இடம்பெற்றுள்ள இந்த அறிக்கையில் முக்கியமாக &lsquo;வாட்டர் மெட்ரோ&rsquo; போக்குவரத்து புதிதாக இடம்பெற்றுள்ளது. கும்டா உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது: சென்னை சென்ட்ரல் முதல் கோவளம் வரை 35 கிலோமீட்டர், கோவளம் முதல் மாமல்லபுரம் வரை 20 கிலோமீட்டர் என மொத்தம் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சாரத்தால் இயக்கப்படும் படகு போக்குவரத்து அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.6,500 கோடி செலவாகும். இதன் திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரிக்கும். பக்கிங்காம் கால்வாயில் 2 மீட்டர் ஆழத்திற்கு வண்டல் மண் உள்ளதை அகற்றினால் மொத்தம் 3 மீட்டர் ஆழம் கிடைக்கும். கால்வாய் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி கழிவுநீர் கலப்பை தடுத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். இதனால் வெள்ளப் பெருக்கு தடுப்பு, கடலில் இருந்து உப்புநீர் நிலத்தடியில் கலப்பதை தடுத்தல், சுற்றுலா மேம்பாடு ஆகியவை சாத்தியமாகும். இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய 8 மாதங்கள் ஆகும். மேலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 4-வது வழித்தடத்திற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழியாக அரக்கோணம் 2-வது வழித்தடத்திற்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் முதல் திருபெரும்புதூர், திருவள்ளூர் மாம்பேடு வழியாக காஞ்சிபுரம், சென்னை எண்ணூர்-சிங்கப்பெருமாள்கோவில்-மகாபலிப்புரம் வரை புதிய வழித்தடங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ விரிவாக்கத்தில் விமான நிலையம்-கிளாம்பாக்கம், கலங்கரை விளக்கம்-உயர் நீதிமன்றம், தாம்பரம்-வேளச்சேரி-கிண்டி, கிண்டி-அடையாறு வழித்தடங்கள் அடங்கும். மாநகர பேருந்துகளை தற்போதுள்ள 3,500-ல் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 6,500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2048-ல் 8,500 பேருந்துகளாக உயரும். மெட்ரோ ரயில் தற்போதுள்ள 54 கிலோமீட்டரில் இருந்து 118 கிலோமீட்டராக விரிவாக்கப்படும். 2048-ல் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.