முந்தய பக்கம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

1 Apr 2026, 4:02 pm
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
<p><strong>நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்</strong></p> <p>திருநெல்வேலி, ஏப். 1- நெல்லை மாவட்ட அணைகளில் புதன்கிழமை நீர்மட்டம் விபரம் வருமாறு பாபநாசம் அணையில் தற்போது நீர் இருப்பு 62.10 அடியாக உள்ளது. நீர் வரத்து 60.23 கன அடியாக உள்ளது. 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது, சேவலாளர் அணையில் தண்ணீர் இருப்பு 72.70 அடியாக உள்ளது, புதிதாக நீர் வரத்தும் இல்லை நீர் வெளியேற்றப்படு வதும் இல்லை. மணிமுத்தாறு அணையில் 81.81 அடி தண்ணீர் உள்ளது, 12.90 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 5 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. களக்காடு அருகே உள்ள வடக்கு பச்சை யாறு அணையில் வெறும் 6 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. தண்ணீர் வரத்து இல்லை. நம்பியாற்று அணையில் தற்போது நீர் இருப்பு வெறும் 14 அடி மட்டுமே உள்ளது. கொடுமுடியாறு அணை யில் தற்போது வெறும் 4 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram