ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
22 Jan 2026, 2:57 pm
<p><strong>ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு</strong></p>
<p>தருமபுரி, ஜன.22- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித் துள்ளது. இரு மாநில காவிரி கரை யோரப் பகுதிகளில் மழை குறைவு, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளி யேற்றப்படும் உபரிநீர் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர் வரத்து விநாடிக்கு 500 கன அடி வரை சரிந்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரியத் தொடங்கியதால், ஒகேனக்கல் லில் உள்ள ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நீரின்றி வறண்டும், பிரதான அருவி சினி அருவிகளில் நீர்வரத்து குறைந் தது. இந்நிலையில், வியாழ னன்று காலை நிலவரப்படி, காவிரி ஆற்றின் நீர்வரத்து திடீ ரென விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர் நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள் ளதால், வறண்ட ஒகேனக்கல் அருவிகளில் சற்று நீர்வரத்து அதி கரித்துள்ளது. மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளதால் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள், நீர்வரத் தின் அளவுகளை தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.</p>
