தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

27 Feb 2026, 5:32 pm
சென்னை விரைவு செய்திகள்

சென்னையில்  ‘வாட்டர் எக்ஸ்போ 2026’ கண்காட்சிதுவக்கம்

சென்னை, பிப். 27– சென்னை வர்த்தக மையத்தில் ‘வாட்டர் டுடே’ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 3 நாள் ‘வாட்டர் எக்ஸ்போ 2026’ பன்னாட்டு கண்காட்சி வெள்ளியன்று (பிப்.27) தொடங்கியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இக்கண்காட்சி, நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான நவீன தீர்வுகளை வழங்கும் முக்கியத் தளமாகத் திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக உற்பத்தி, மருந்து, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சவால்கள் குறித்து 7 இணை மாநாடுகள் நடைபெற்றன. அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த நேரடி செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

ரூ.6 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சென்னை, பிப். 27– தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான 5.9 கிலோ உயர்தர ஹைட்ரோ போனிக் கஞ்சாவைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் ஏர் ஏசியா விமானத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த இளை ஞரைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டபோது, அவரது சூட்கேசில் 15 பார்சல்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டி ருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. விசாரணையில், பணத்திற்காக முதன்முறை யாக ‘குருவி’யாகச் செயல்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். விமான நிலையத்திற்கு வெளியே இதைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்த நபர் தப்பி யோடிய நிலையில், கைதான இளைஞரிடம் அதி காரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை வழக்கில்  அதிமுக பிரமுகர் மகன் கைது

சென்னை, பிப். 27–  சென்னை போரூர் மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிராம் ‘ஒஜி’ வகை கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், செம்பரம் பாக்கத்தைச் சேர்ந்த சுனில் (21), அவரது நண்பர்கள் வருண் (23), விஸ்வேஸ் (22) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.

மாணவன்  நீரில் முழ்கி பலி

சிதம்பரம், பிப். 27- சிதம்பரம் அருகே பரமேஸ்வரநல்லூர் தொழி லாளர் குடியிருப்பு அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாண வன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.  சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 1-வது வார்டில் வசிக்கும் மாரியப்பன் மகன் முகுந்தன்(14) அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை (பிப்.27) மாலை மாணவன் தொழி லாளர் குடியிருப்பு பகுதி யில் உள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினார். இதனை அறிந்த  பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரி சோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த னர். இது குறித்து சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரு கிறார்கள்.

தங்கம் விலை குறைவு

சென்னை,பிப்,27-  தங்கம் விலை வெள்ளிக் கிழமை (பிப்.27)  சற்று குறைந்தது. இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.1,19,200க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.14,900க்கு விற்பனையாகிறது. வெள்ளி  விலை எந்தவொரு மாற்ற மும் இல்லாமல் தொடர் கிறது. வெள்ளி விலை கிரா முக்கு ரூ.295க்கு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.