மசூதி முன்பு விநியோகிக்கப்பட்ட விசில் சின்னம் அச்சிட்ட தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>மசூதி முன்பு விநியோகிக்கப்பட்ட விசில் சின்னம் அச்சிட்ட தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்</strong></p>
<p>சேலம், மார்ச் 21- சேலத்தில் மசூதி முன்பு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விசில் சின்னம் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ரமலான் நோன்பை முன்னிட்டு, சனியன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நாடு முழுவதும் நடைபெற்றது. இதனையொட்டி, சேலம் மாவட்டத்திலும் மசூதிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இந்நிலையில், சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள அந்தோணிபுரம் ஆசாத் நகர் மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து வெளியேறும் பொதுமக்களுக்கு, தமிழக வெற்றி கழகத்தினர், கட்சியின் கொடி நிறம் மற்றும் விசில் சின்னம் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், அங்கு விநியோகிக்கப்பட்டு கொண்டிருந்த சுமார் 1000 தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களை பாதிக்கும் வகையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
