ரூ.100 கோடியில் நீர்நிலைகள் புனரமைப்பு!
18 Feb 2026, 3:04 pm
<p><strong>ரூ.100 கோடியில் நீர்நிலைகள் புனரமைப்பு!</strong></p>
<p>சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு</p>
<p>சென்னை, பிப். 18 - 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார். 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை புதனன்று (பிப்.18) தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி ஆர்.பிரியா வெளியிட்ட அறிவிப்புகள்: அம்பத்தூர் ஏரி, மஞ்சம்பாக்கம் ஏரி, புல்லக்கேணி குளம், வையாபுரி குளம், சாலிமார் கார்டன் குளம் மற்றும் 30 நீர்நிலைகளை ரூ.100 கோடி செலவில் புனரமைத்து கொள்ளவையும், நீர்சேமிக்கும் திறனையும் அதிகரிக்கப்படும். ஜார்ஜ்டவுன், கத்திவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, ராமபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள மாநகர பேருந்து நிலையங்கள் ரூ.110 கோடி புதுப்பித்து கட்டப்படும். கல்வி சென்னை மேல்நிலைப் பள்ளி களில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாண வர்களுக்கு ஓராண்டுக்கு உயர்கல்விக் கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும். அறிவியல் மற்றும் கணினி பிரிவு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த நவீன அறிவியல் மையம் ஏற்படுத்தப்படும். உயர்நிலைப் பள்ளியில் உளவியல் ஆலோசகர் நிய மனம் செய்யப்படுவார்கள். வகுப்பு கட்டுமான பணிக்கு ரூ.40 கோடி செலவிடப்படும். தசைத்திறன் குறை பாடுள்ள சிறப்பு குழந்தைகளுக்கு எஞ்சிய 14 மண்டலங்களிலும் அரசு சாரா நிறுவனங்கள் வாயிலாக சிறப்பு பள்ளிகள் நிறுவப்படும். சுகாதாரம் தெரு நாய்களுக்கும் வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் திட்டம் ரூ.3.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும். வடக்கு வட்டா ரத்தில் ஒரு இறைச்சிக்கூடம் நிறு வப்படும். புளியந்தோப்பு காசநோய் மருத்துவமனை ரூ.5 கோடி செலவிலும், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை 6 கோடி ரூபாய் செலவிலும் புதிதாக கட்டப்படும். 3 சமுதாய நல மருத்துவ மனைகளில் ரூ. 3 கோடி செல வில் இயற்கை மருத்துவப்பிரிவு தொடங்கப்படும். பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்திலும், மணலியிலும் உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படும். அனைத்துவகையான தூய்மைப் பணியாளர்களுக்கும் கோடைக் காலத்தில் குளிர்ச்சியான மோர் வழங்கப்படும். 200 பூங்காக்கள் தற்காலத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பொலி வேற்றம் செய்யப்படும். மணலி, தங்கசாலை, மதனகுப்பம், டாக்டர் விஸ்வேஸ்வரைய்யா டவர், ராஜிவ் காந்தி சாலை ஆகிய 5 பூங்களில் சிறப்பு குழந்தைகளுக்கான உபகர ணங்கள் உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மாற்றப்படும். பூங்காக்களில் மரங்கள் மூலம் உயிற் காற்று உற்பத்தியை அதி கரிக்க, பொதுமக்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைச் சென்னை திட்டம் செயல்படுத்தப்படும். 50 விளையாட்டு திடல்கள் மேம்படுத்தவும், உபகரணங்கள் வாங்க வும் ரூ.20 கோடி செலவிடப்படும். ஜோதிநகர், பர்மாநகர், எம்ஆர்பி நகர் (மணலி நியூ டவுன்), வழு தலைமேடு (சின்னசேக்காடு), கெனால் பேங்க் ரோடு (அடையாறு) ஆகிய 5 விளையாட்டு திடல்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் (எகோ பிளாக்) ரூ.25 கோடி செலவில் அமைக்கப்படும். 44 கால்வாய்களில் வெள்ளப்பாது காப்பு தடுப்புச்சுவர் கட்டப்படும். உயர்நீதிமன்றம் முதல் காவல்துறை ஆணையர் அலுவலகம் எதிரே உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் சர்ச் வரை ரூ.10 கோடி செலவில் வண்ண விளக்குகள் அமைக்கப்படும். பக்கிங்காம் கால்வாயில் கரையில் காஸ்தூரிபாய் நகர் சந்திப்பின் வடக்குமுனையிலிருந்து திருவான்மியூர் தெற்கு பகுதி வரை நடைபாதை, மிதிவண்டிபாதை, மியாவாக்கி குறுங்காடு, குழந்தை களுக்கான விளையாட்டு உப கரணங்கள், இருக்கை வசதிகளுடன் கூடிய நகர்ப்புற பசுமையாக்கல் திட்டம் ரூ.45 கோடி செலவில் செயல்படுத்தப்படும். பள்ளிகளுக்கு பாதுகாப்பான வழித்தடம் அண்ணாநகர், தி.நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் மின்வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்படும். கடற்கரையுடன் எம்ஆர்டிஎஸ், மெட்ரோ நிலையம், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கே.கே.நகர் ஆகிய பள்ளி மண்டலங்களில் வாகன வேகத்தை குறைக்கும் வகையில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளி களுக்கு பாதுகாப்பான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி, வாகன வேகத்தை குறைக்கும் ஏற்பாடுகள், அகலமான நடைபாதைகள், பாது காப்பான சாலை கடப்புகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடியதாக 200 கோடி ரூபாய் மதிப்பிட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மிண்ட்சாலை - வண்ணாரப்பேட்டை மெட்ரோ, சேப்பாக்கம் - மெரினா ஆகிய இடங்களில் 40 கோடி ரூபாய் செலவில் பன்முக போக்கு வரத்து ஒருங்கிணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பாலம் சேத்துப்பட்டு மெக்னிக்கல்ஸ் சாலை - ஈ.வெ.ரா பெரியார் சாலையை இணைக்கும் வகையில் 25 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். ஆதம்பாக்கம் கக்கன் பாலம் ரூ.5 கோடி செலவில் புனரமைக்கப்படும். விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே வட அகரத்தில் உள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக 5 கோடியில் புதிய பாலம் கட்டப்படும். மாம்பலம் கால்வாயின் குறுக்கே மூப்பாரப்பன் தெரு, சிஐடி நகர் வடக்கு சாலையில் பழுதடைந்த பழைய பாலங்களை இடித்துவிட்டு ரூ.7.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக இரண்டு பாலம் கட்டப்படும். 50 கோடி ரூபாய் செலவில் 50 மயானங்கள் மேம்படுத்தப்படும். 6 இடங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரவு காப்பகங்கள் அமைக்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்கள், வீடற்றவர்கள் தங்குவதற்கு 12 கோடி ரூபாய் செலவில் 200 இடங்களில் தற்காலிக, இடை நிலை தங்குமிடங்கள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர் சமூகத்தின் உரிமை, பாதுகாப்பு, நலனை உறுதி செய்ய ‘சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவு’ உருவாக்கப்படும். மேலும், குழந்தைகள் மற்றும் முதியோரிடையே கலை, கலாச்சாரம், பொழுதுபோக்குகளை ஊக்குவிக்க ‘மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு பிரிவு’ உருவாக்கப்படும். பேருந்து சாலைகள் 15 பேருந்து தடச் சாலைகளில் வேகத்தடை, ஒலிபெருக்கி மற்றும் கட்டைத்தூண் போன்றவை ரூ.45 கோடி செலவில் நிறுவப்படும் 100 பிரதான சாலை சந்திப்புகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்தப்படும். 10 சமுதாய நலக்கூடங்கள் ரூ.20 கோடி செலவில் நவீனமாக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.</p>
