தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

7 Feb 2026, 5:37 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, பிப்.7- ஒகேனக்கலுக்கு 1200 கனஅடியாக இருந்த நீர்வ ரத்து, சனியன்று அதிகரித்துள்ளது. கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஒகேனக்கலுக்கு  நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து  வருகிறது. அதன்படி, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து  வெள்ளியன்று நிலவரப்படி, 1200 கனஅடியாக  இருந்தது. இதனிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதியில்  மழை பெய்ததால், சனியன்று காலை 8 மணி நிலவரப் படி நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்தது. இத னால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி  உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து, காவிரி ஆற்றின் அழகை ரசித்த னர். மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில்  பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமு டன் ரசித்து மகிழ்ந்தனர். இதன்பின் மெயின் அருவியில்  குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்த னர். நீர்வரத்தின் அளவு குறித்து தமிழக - கர்நா டகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர்.

கல்லூரி மாணவருக்கு தங்கம்!

ஈரோடு, பிப்.7- ஈரோடு கொங்கு பொறி யியல் கல்லூரியில் பிடெக் -  ஐடியில் மூன்றாமாண்டு பயி லும் விஷ்ணு கோபாலசாமி என்பவர், ‘டிஎன் ஸ்கில்ஸ்’ போட்டியின் சாஃப்ட்வேர்  அப்ளிகேஷன் டெவெலப் மென்ட் பிரிவில் முதலிடம் பெற்றார். பல கட்டத் தேர்வு கள் மற்றும் ஜோகோ கார்ப் பரேஷனில் நடைபெற்ற இறுதி ஹாக்கத்தான் போட் டியை வெற்றிகரமாக முடித்து, தமிழ்நாடு முழுவ தும் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட இறுதி போட்டியா ளர்களில் விஷ்ணு முதலி டத்தை பெற்றார். இந்நிலை யில், தமிழ்நாடு துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணுவுக்கு தங்கப் பதக் கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார்.

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

தருமபுரி, பிப்.7- ஆசை வார்த்தை கூறி, பள்ளி மாணவியை  வெளியூர் அழைத்துச் சென்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காவல்  நிலையத்திக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளத்தில் இளைஞருடன் பழக் கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த இளைஞர், ஆசை வார்த்தை கூறி, சிறு மியை அண்மையில் வெளியூருக்கு அழைத் துச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சிறுமி யின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,  மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். விசா ரணையில், சிறுமியை அழைத்துச் சென்றது  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 19  வயது இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று  காவல் துறையினர் விசாரணை மேற்கொண் டனர். இதுகுறித்து விவரம் அறிந்த இளை ஞர், ஒரு வாரம் கழித்து சிறுமியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு தப்பியோடி யுள்ளார். தொடர்ந்து, அவரை போலீசார்  தேடிவந்த நிலையில், கிருஷ்ணகிரியிலிருந்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய் தனர்.

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்  சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம் ஈரோடு, பிப்.7- பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் 27 ஆவது அமைப்பு தினம், சனியன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை கிளையில் கொடியேற்றி கொண்டா டப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.கோபால் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை துணைச்செயலாளர் கே.சண்முகம், சங்கத்தின்  கொடியேற்றி வாழ்த்திப் பேசினார். ஒப்பந்த ஊழியர் சங்க  மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ் துவக்கவுரையாற் றினார். இதில் ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைச்செயலா ளர் செ.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆயதப்படை வளாகத்தில் நூலகம் திறப்பு ஈரோடு, பிப்.7- ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், புதிய நூலகம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் அடங்கிய அறை திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடியி ருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொது அறிவை மேம்படுத்தவும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் புதிய நூலகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் அடங்கிய அறை யினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா சனி யன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி சேலம், பிப்.7- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சொத்து  தகராறில், மூன்று மகளுடன் கணவன், மனைவி தீக் குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், சிவதாபுரம் அடுத்த பெருமாம்பட்டி கணவாய் காடு பகுதியை சேர்ந்தவர் குணா (45) மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா(42), மகள்கள் கண்மணி (15), வர்ஷிகா(7) மவுலிகா (5) ஆகியோர், சனி யன்று ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை  மேலே ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். அப்போது  அங்கு செய்தியை எடுத்துக் கொண்டிருந்த தந்தி ஊடகத்தை  சேர்ந்த லோகேஷ் என்பவர், உடனடியாக அவர்கள் மீது  தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார். இதனையடுத்து அப்பகுதி வந்த சேலம் டவுன் காவல்துறையினர் தற்கொலைக்கு முயன் றவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு கோபி, பிப்.7- கோபி அருகே புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியி ருப்பு வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளைத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ரூ.44 கோடியே 77 லட்சம் மதிப்பிட்டில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப் பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளியன்று திறந்து வைத்தார்.

புறக்கணிக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?

கோவை, பிப்.7- கோவையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சி யில், செங்கோட்டையனின் ஒரு புகைப்படம் கூட எந்த பேனரிலும் இடம்பெறாதது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு  தனியார் திருமண மண்டபத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்  கேட்பு கூட்டம் சனியன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின்  மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், பொதுமக்களிடம் இருந்து மனுக் களை பெற்றுக் கொண்டார்.  முன்னதாக, நிகழ்ச்சியில் நடந்த அரங்கி லிருந்த பேனரில், அக்கட்சி தலைவர் விஜய்  புகைப்படம் மட்டுமே இருந்தது. இதேபோல கட்சி நிர்வாகிகள் சார்பில் வெளியே வைக் கப்பட்டு இருந்த பேனர்களிலும் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகைப்படங்கள் இடம் பெற் றிருந்தன. அதேசமயம் அக்கட்சியின் உயர் மட்ட மாநிலக்குழு தலைமை ஒருங்கிணைப் பாளரும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட அமைப்பு செயலாளரு மான செங்கோட்டையனின் ஒரு புகைப்படம் கூட எந்த பேனரிலும் இடம்பெறவில்லை.  9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 ஆட்சிகளில் அமைச்சராகவும் இருந்த மூத்த அரசியல்வாதியான செங்கோட்டை யனின் சொந்த மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு மண்டல மக்கள் கருத்துக் கேட்பு  கூட்டத்தில், அவரின் புகைப்படங்கள் முழு மையாக தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும்,  இந்நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங் கேற்காமல் இருந்ததும் கட்சியில் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற சந்தே கத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே கட்சியில் செங்கோட்டையனுக்கு உரிய முக்கியத்து வம் அளிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் உள்ள நிலையில், செங்கோட்டையனின் புறக் கணிப்பு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள்

கோவை, பிப்.7- பொது இடங்களில் குப்பைகளை கொட்டி, தீ வைப்பதால் நோய் பரவும் அபா யம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வாசு தேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை அகற்றாமல் அதே இடத்தில் தீயிட்டு எரிப்பதால் அப்ப குதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருகிறது. இதன் காரணமாக காற்று மாசு  அதிகரித்து, காற்றின் மூலம் நோய் பரவும்  அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனை குறித்து கிராம சபை கூட்டங்களில் பலமுறை புகார் அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குப்பை களை முறையாக தரம் பிரித்து சேகரித்து அகற்றுவதோடு, பொது இடங்களில் குப்பை  எரிப்பதை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

குடியிருப்பு அருகே கரடி உலா

உதகை, பிப்.7- கோடப்பமந்து குடியி ருப்பு பகுதியில் கரடி ஒன்று  உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட கோடப்பமந்து - கல்லரை குடியிருப்பு பகுதி அருகே வெள்ளியன்று கரடி ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்தி ரிந்தது. சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் உள்ள கேரட் தோட்டத்துக்குள் புகுந்தது. இதைப்பார்த்த ஒரு சிலர் கூட்டமாக சென்று கரடியை விரட்ட முயன்றபோது, கரடி அவர்களை தாக்க முயற்சித் தது. இதனால் அதிர்ச்சிய டைந்த பொதுமக்கள் அங்கி ருந்து தப்பியோடினர். குடியி ருப்பு பகுதியில் பகல் நேரத் தில் கரடி நடமாடியதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் அச்சமடைந்தனர். எனவே, வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்க  வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்தூரில் அரசு நேரடி நெல்  கொள்முதல் நிலையம் திறப்பு

திருப்பூர், பிப்.7- திருப்பூர் மாவட்டம், முத்தூரில் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரண வரே வெள்ளியன்று திறந்து வைத்தார். வெள்ளகோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை ஆட்சியர் மணிஷ் நாரணவரே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் வெள்ளகோவில் வட்டாரம், ஊடையம் பகுதியில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கிலோவிற்கு  ரூ.34 கொள்முதல் மானியத்தில் 2 ஹெக்டர் பரப்பரளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களையும், வேலம்பாளையத் தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 50 சதவீதம் ரூ.81 ஆயிரம் மானியத்தில் 0.5 ஹெக்டர் பரப்பரளவில் பயிரிடப்பட் டுள்ள டிராகன் பழச்செடிகளையும் அவர் பார்வையிட்டார். இதையடுத்து, முத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி  கொள்முதல் நிலையத்தில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத் தார்.

குறைதீர் கூட்டம்

உடுமலை, பிப்.7- வன விலங்குகளால் ஏற்ப டும் பாதிப்புகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உடுமலை வனச்சரக அலு வலகத்தில் சனியன்று விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் பேசிய விவசாயிகள் உடு மலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் மக்கசோளம் மற் றும் சிறுதானியங்கள் அறு வடை காலமாக உள்ளதால் காட்டுபன்றிகள் மற்றும் மயில் கள் விளைநிலங்களை கடு மையாக சேதப்படுத்தி வருகி றது. இதனை வனத்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு விலங்குகள் தற்பொ ழுது விவசாயிகளையும் தாக்கி வருகிறது.  காட்டு விலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு வனத்துறை சார்பில் தரப்ப டும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தினர்.

பிப்.12இல் பொது வேலை நிறுத்த தயாரிப்பு

அவிநாசி, பிப்.7- அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தை அவிநாசி பகுதியில் முழு வெற்றியடைவதற்கான ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. ஏஐடியுசி அவிநாசி அலுவலகத்தில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்திற்கு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி தலைமை ஏற்றார். இதில்  பிப்ரவரி 12 இல் நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்தையொட்டி, வருகின்ற 8 ஆம் தேதி (இன்று) சேயூர், நம்பியாம்பாளையம், கருவலூர், தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், பாரதிநகர் மற்றும் அவிநாசி புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் துண்டறிக்கை விநியோகம் செய்து, தெருமுனைப்பிரச்சாரம் நடத்துவது, பிப்ரவரி 12 அவிநாசி தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், ஏஐடியுசி சார்பில் எம். மோகன், இரா.முத்துசாமி, என்.செல்வராஜ், சிஐடியு சார்பில் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஏ.சண்முகம், ஏ.ராஜன், கனகராஜ், ஐஎன்டியுசி சார்பில் அசோக், எம்எல்எப் சார்பில் பாபு, யூடிசி சார்பில் ரஞ்சித், எஸ்.கே.எம் சார்பில் எஸ்.வெங்கடாச்சலம், ஏ.ஆர்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிப்.10இல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

திருப்பூர், பிப்.7– திருப்பூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை  முன்னிட்டு பிப்.10 ஆம் தேதியன்று குடற்புழு நீக்க மாத்திரை கள் வழங்கப்பட உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள 7 லட்சத்து 51 ஆயிரத்து 658 குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து 20 வயது முதல் 30 வயது வரையுள்ள 2 லட்சத்து 48ஆயிரத்து 79 நபர் களுக்கும் பிப்.10 ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். இதில் விடுபடுவோருக்கு பிப். 17 ஆம் தேதி யன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் இம்மாத்திரைகள் வழங்கப்படும். காலை உணவு அல்லது மதிய உணவு உட்கொண்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு இம்மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. அதேசமயம் குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறை பாடு, சோர்வு, படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதிலிருந்து விடுபட அல்பெண்டசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம் என்று மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா வழங்க பணம் வசூல்: தவிக்கும் ஏழை மக்கள்

திருப்பூர், பிப்.7- தமிழக அரசு நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தில், பட்டா கொடுப்பதற்கு வருவாய்த் துறை அலுவலர்களும், உள்ளூர் அரசி யல் கட்சியினரும் ஏழை மக்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நிலமற்ற ஏழை, எளிய மக்கள் வீட்டுமனைப் பட்டா கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஒரு பகுதியின ருக்கு வீட்டுமனைப் பட்டா கொடுக் கப்பட்டு இருந்தாலும், அவர்க ளுக்கு பட்டாவுக்கு உரிய நிலம் அளந்து தரப்படாமல் பட்டா வெறும் காகிதத்திலேயே உள்ளது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசா யத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட  அமைப்புகள் நீண்ட காலமாக, வீடு, நிலம் இல்லாத ஏழை, எளிய  மக்களுக்கு வீட்டுமனை மற்றும் நிலப் பட்டா வழங்க வேண்டும் என  தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து பல பகுதிகளில் போராட்டங்களை யும் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சரவைக் கூட் டத்தில், ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் சுமார் 86,271 ஏழை மக்க ளுக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்ப டையில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தி லும் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் வீட்டுமனைப் பட் டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனி னும் அரசின் முடிவுப்படி மேற் கொள்ளும் இந்த பணியில் வரு வாய்த் துறையில் பணியாற்றக் கூடி யவர்களும், உள்ளூர் அரசியல் கட்சியினரும் பட்டா பெற்றுத் தருகி றோம் என மக்களிடம் பணம் கேட் டுப் பெற்றுள்ளது தெரிய வந்துள் ளது. குறிப்பாக, இடுவாய் ஊராட் சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதி யில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களிடம் பட்டா பெற்றுத் தருவ தாக சொல்லி சிலர் பணம் வசூலித் துள்ளனர். ஏழை மக்களும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு எப்படியா வது பட்டா பெற்றால் சரி என்று சிர மப்பட்டு கடன் வாங்கியாவது பணம் வழங்குகின்றனர். ரூ.30 ஆயிரம்,  ரூ.40 ஆயிரம் என பணம் வசூலித்தி ருக்கும் விபரம் தெரியவந்துள் ளது. இது தவிர வேறு சில பகுதி களில் வருவாய்த் துறையை சேர்ந் தவர்களே லட்சக்கணக்கில் பணம் கேட்டுப் பெறுவதாக தெரிய வரு கிறது.  எனவே, பட்டா பெறுவதற்கு மக்கள் பணம் தர வேண்டிய தில்லை. உள்ளூர் அரசியல் பிர முகர்களையோ, இடைத் தரகர்க ளையோ, வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்களையோ நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று  அரசு நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அத்துடன் பட்டா பெற்ற மக்களிடம் பணம் வசூலித்தவர்கள் மீது விசாரணை நடத்தி துறைரீதியாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும்  சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்து கின்றனர். இனியும் வீட்டுமனைப் பட்டா பெறாத மக்கள் ஏராளமா னோர் காத்திருக்கின்றனர். தகுதி யுள்ளவர்களுக்கு பட்டா கொடுக்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், இதில் முறைகேடுகள் நேராதபடி தவிர்க்க வேண்டும் என் றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.