தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாஷிங் மெஷின் அரசியலும் ஏவல் ஏஜென்சிகளும்!

27 May 2026, 8:19 pm
வாஷிங் மெஷின் அரசியலும்  ஏவல் ஏஜென்சிகளும்!

வாஷிங் மெஷின் அரசியலும் ஏவல் ஏஜென்சிகளும்!

இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ‘அரசியல் கருவிகளாக’ மாற்றப்பட்டிருக்கின் றன என்பதைத்தான், கேரள முன்னாள் முதல் வர் பினராயி விஜயன் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

இந்தியாவில் இன்று அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமான வரித் துறை ஆகியவை எந்த நேரத்தில், யார் வீட்டில் சோதனை நடத்தும் என்பதைத் தீர்மானிப்பது சட்டம் அல்ல; மாறாக, அது பாஜகவின் அர சியல் கணக்கீடே.

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா காங்கிரஸில் இருந்தபோது, பாஜகவால் அவர் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. ஆனால், அவர் பாஜகவில் இணைந்த பிறகு அந்த வழக்குகள் எங்கே போயின என்று இன்றுவரை தெரியவில்லை.

மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி திரிணா முல் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா சிட் ஃபண்ட் மற்றும் நாரதா ஸ்டிங் ஆபரேஷன் ஊழல் வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக் கத்துறையின் நடவடிக்கைகள் அவர் மீது பாய்ந்தன. அவர் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிட்டு பாஜக அவரைக் கடுமையாக விமர் சித்தது. ஆனால், அவர் திரிணாமுல் காங்கிர ஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்த அடுத்த கணமே ‘வாஷிங் மெஷின்’ அற்புதம் நிகழ்ந்தது. சிபிஐ, அமலாக்கத்துறை, நடவடிக்கைகள் அனைத்தும் மாயமாய் மறைந்தன. அதுமட்டு மல்லாமல், தற்போது அவர்தான் பாஜக அரசின் முதல்வர். இது தற்செயலானது அல்ல; இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் வழிமுறை.

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய் யப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறையின் அரசியல் சார்புத்தன்மையை நாட்டின் உயரிய நீதிமன்றமே வெளிச்சம் போட்டுக் காட்டியது. “பழிவாங்கும் நோக்கத்துடனும், ஒருதலைப் பட்சமாகவும் அமலாக்கத்துறை செயல்படக் கூடாது” என்று நீதிமன்றம் வைத்த குட்டு, இந்த ஏஜென்சிகள் யாருக்காக வேலை செய்கின்றன என்பதை அம்பலப்படுத்தியது.

அதிகார பலத்தாலும், ஏஜென்சிகளின் மிரட்டலாலும் ஒரு கட்சியின் சித்தாந்தத்தை யோ அல்லது மக்கள் செல்வாக்கையோ அழித்து விட முடியாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியோ அல்லது பினராயி விஜய னோ ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. ஜன நாயக அமைப்புகளைக் கைப்பாவையாக்கி, அதன் மூலம் தங்களின் அரசியல் எதிரிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கு நீண்ட நாள் நீடிக்காது. கொள்கை ஸ்திரத்தன்மை கொண்ட தலைவர் கள் இத்தகைய சோதனைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவார்கள்.மக்கள் மன்றமும் இத்தகைய அச்சுறுத்தல் அரசியலுக்குப் பொருத்தமான பதிலடி கொடுக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.