வண்ணாரப்பேட்டை - செங்குன்றம் இடையே புதிய மெட்ரோ வழித்தடம் அமைத்திடுக வடசென்னை குடியிருப்போர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
2 Nov 2026, 11:29 pm

வண்ணாரப்பேட்டை - செங்குன்றம் இடையே புதிய மெட்ரோ வழித்தடம் அமைத்திடுக வடசென்னை குடியிருப்போர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, நவ. 2-வடசென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும், கடுமையான வாகன நெரிசலுக்குத் தீர்வு காணவும் மாதவரம் அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் செங்குன்றம் வரையிலும் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றுவடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆசிஸ்சாட்டர்ஜியிடம் இரு முக்கிய கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த மனு அளிப்பு நிகழ்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) டி.லிவிங்ஸ்டன் எலியேசர், வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்.ஜெயராமன், அமைப்பு செயலாளர் எஸ்.ஏ.வெற்றி ராஜன், மணலி புதுநகர் குடியிருப்போர் சங்க தலைவர் பி.சந்திரமோகன், இணை செயலாளர் என்.கோவிந்தராஜ், மணலி புதுநகர் மெட்ரோ ரயில் கோரிக்கை குழுவைச் சேர்ந்த ஜி.தென்கனல், எம்.டி.ஜெயகுமார், சி.கோவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

மாதவரம் அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை மாதவரம் அசிசி நகர், மாத்தூர், மணலி,மணலி நியூ டவுன், எண்ணூர், கத்திவாக்கம்,எர்ணாவூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி விம்கோ நகர் வரை விரிவுபடுத்த வேண்டும்.வண்ணாரப்பேட்டையிலிருந்து தொடங்கி மூலக்கொத்தளம், பேசின் பாலம், வியாசர்பாடி பாலம் (வியாசர்பாடி அசோக்பில்லர்), உதயசூரியன் நகர், சத்தியமூர்த்தி நகர், மகாகவி பாரதி நகர் (எம்.கே.பி. நகர்),அம்பேத்கர் கலைக் கல்லூரி சந்திப்பு, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சர்மா நகர், மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா, காவாங்கரைவழியாகச் செங்குன்றம் வரை புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும்.

திட்டத்தின் அவசியமும் பலன்களும்

பேசின் பாலம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா உள்ளிட்ட வடசென்னையின் முக்கியச் சாலைச் சந்திப்புகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல்,பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் பயண நேரத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றது.

மேலும், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அறிவிக்கப்பட்டுள்ள பன்நோக்கு சிறப்புமருத்துவமனைக்கு நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரவும், அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக மருத்துவமனையை அடையவும் இந்த புதியமெட்ரோ வசதி மிகவும் அவசியமாகும்.வடசென்னையின் அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகளையும் முக்கியச் சாலைகளையும் இணைக்கும் வகையில் இந்தவழித்தடங்கள் அமையும் போது, பொதுப் போக்குவரத்து வசதி வலுப்பெற்றுத் தனியார் வாகனப் பயன்பாடு கணிசமாகக் குறையும் என்றும், அது வடசென்னையின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆசிஸ் சாட்டர்ஜி,

கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ள இந்த வழித்தடங்களை உரிய முறையில் ஆய்வுசெய்வதாகவும், வடசென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கண்டிடும் வகையில் மெட்ரோ ரயில்சேவைத் திட்டங்களை வடிவமைப்பதாகவும் உறுதியளித்தார்.