தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குன்னத்தூரில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த தீக்காயம் விபத்தா? கொடுமையா? - விசாரிக்க வலியுறுத்தல்

31 Jan 2026, 3:56 pm
 குன்னத்தூரில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த தீக்காயம்  விபத்தா? கொடுமையா? - விசாரிக்க வலியுறுத்தல்
<p><strong>&nbsp;குன்னத்தூரில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த தீக்காயம் &nbsp;விபத்தா? கொடுமையா? - விசாரிக்க வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், ஜன.31 - &nbsp;திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர் அரசு &nbsp;உதவிபெறும் பள்ளியில், 8 ஆம் &nbsp;வகுப்பு மாணவர் ரக்சித் ஜோஸ் தீக் குழியில் விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் &nbsp;என ஜனநாயக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சம்பவம் என்ன? குன்னத்தூர் என்.ஆர். கருப் பண்ண நாடார் பள்ளியில் பயிலும் &nbsp;பனியன் தொழிலாளி ஜெயராஜின் மகன் ரக்சித் ஜோஸ், வெள்ளியன்று மாலை வழக்கம் போல வகுப்பறை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். குப்பைகளை வளா கத்தில் உள்ள குழியில் கொட்டிய போது, சக மாணவர்கள் இருவர் ரக்சித்தின் கை கால்களைத் தூக்கிக் &nbsp;குழியில் வீசியதாகக் கூறப்படுகிறது. &nbsp;முந்தைய நாள் எரிக்கப்பட்ட குப்பை யின் அடியில் தீக்கனல் இருந்த தால், ரக்சித்தின் கை மற்றும் &nbsp;இடுப்புப் பகுதியில் பலத்த தீக்கா யம் ஏற்பட்டது. தற்போது அவர் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உருவக்கேலியும் சாதியப் பாகுபாடும்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரைச் சந்தித்து &nbsp;இந்திய மாணவர் சங்கம் மற்றும் &nbsp;தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் நலம் விசாரித்தனர். அப்போது, பள்ளியில் சில ஆசிரி யர்கள் ரக்சித்தை உருவக்கேலி செய்ததாகவும், மாணவர்கள் சிலர் &nbsp;தொடர்ந்து அவரை அவமானப் படுத்தி வந்ததாகவும், மாணவரும் &nbsp;அவரது பெற்றோரும் கண்ணீருடன் &nbsp;தெரிவித்துள்ளனர். இது தற்செய லாக நடந்த விபத்து மட்டுமல்ல, தொடர்ச்சியான பாகுபாட்டின் விளைவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவல்துறையின் விளக்கம் இச்சம்பவம் குறித்து திருப்பூர் &nbsp;மாவட்ட காவல்துறை சனிக்கிழமை &nbsp;மாலை அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில், &ldquo;மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது &nbsp;சமநிலை தவறி விழுந்து காயம் &nbsp;ஏற்பட்டுள்ளது. இதில் தீங்கிழைக் கும் நோக்கமோ அல்லது சாதியப் பாகுபாடோ இல்லை&rdquo; எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கைகள் இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மாணவர் &nbsp;சங்கத்தினர், மாணவர் தீயில் தள்ளப் பட்டது குறித்து கல்வித்துறையும் காவல்துறையும் நேர்மையாக, முழு விசாரணை நடத்த வேண்டும்; &nbsp;இதில் தீண்டாமை அல்லது வன்கொடுமை நடந்திருப்பது உறுதி &nbsp;செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட வர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும்; மாணவர்களைத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தும் முறையை உடனடியாகக் கைவிட்டு, &nbsp;பள்ளிகளுக்குப் பகுதிநேரப் பணி யாளர்களை நியமிக்க வேண்டும்; மாணவரை உருவக்கேலி செய்த &nbsp;ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை &nbsp;நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.