தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மர்லின் மன்றோ ஒரு கம்யூனிஸ்டா?

13 Jun 2026, 7:28 pm
மர்லின் மன்றோ ஒரு கம்யூனிஸ்டா?

மர்லின் மன்றோ ஒரு கம்யூனிஸ்டா?

முதல் பார்வையில் இந்தத் தலைப்பின் கேள்வி அபத்தமாகத் தோன்றலாம்: “முட்டாள் பொன்னிறப் பெண்” (ditzy blonde) என்ற பிம்பத்துடன் புகழ்பெற்ற ஒரு ஹாலிவுட் கவர்ச்சிநட்சத்திரத்துக்கும் கம்யூனிச சித்தாந்தத்துக்கும் என்ன தொடர்பு?

ஆனால், அவர் இறந்து அறுபது ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நெட்ஃப்ளிக்ஸ் திரைப்படமான Blonde மீண்டும் ஒருமுறை மர்லின் மன்றோவின் சமூக-அரசியல் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது. அமெரிக்க திரைப்படத் துறை இதை எதிர்கொள்ள அஞ்சுகிறது.

மர்லின் மன்றோ கம்யூனிச ஆதரவாளரா? கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர் புகள் இருந்தனவா? சோவியத் யூனியன், பிடல்காஸ்ட்டோ தலைமையிலான கியூபா, மற்றும் மக்கள் சீனக்குடியரசு குறித்து அவரது கருத்துகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு நேரடியான பதில் இல்லை.

2012-ஆம் ஆண்டில், மர்லின் மன்றோ மீது அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன் (Federal Bureau of Investigation) (FBI) நடத்திய தீவிரக் கண்காணிப்பைப் பதிவு செய்த ஆவணங்கள் வெளியிடப் பட்டன.

1962 ஆகஸ்டில் மன்றோ மரணமடைவதற்கு முந்தைய ஆண்டுகளில், கம்யூனிஸ்டுகளுடனான தொடர்புகள் இருப் பதாக சந்தேகித்து எஃப்பிஜ அவரைக் கண்காணித்தது. அவரது கோப்பு 1955-இல் தொடங்குகிறது. அப்போது அவர் சோவியத் ஒன்றியத்திற்கு பயணம் செய்ய விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது பயணங்கள், தொடர் புகள், இடதுசாரி கருத்துக்கள் அல்லது கம்யூனிசத்துடன் சாத்தியமான இணைப்புகள் பற்றிய சான்றுகளைத் தேடு வதே அந்தக் கண்காணிப்பின் நோக்கமாக இருந்தது.

இடதுசாரி சாய்வு கூட...

அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் எஃப்பிஜ கண்டுபிடிக்கவில்லை. இருப் பினும், இடதுசாரி அல்லது அரசியல் ரீதியாக முற்போக் கான பின்னணி கொண்டவர்களுடன் மன்றோ வைத்திருந்த தொடர்புகள் குறித்து எஃப்பிஜ அதிக அக்கறை கொண்டி ருந்தது. ஏனெனில் ஜோசப் மெக்கார்த்தி (Joseph McCarthy) யின் காலகட்டத்தில், இடதுசாரி சாய்வு கொண்ட ஒரு தாராளவாதியாக இருப்பது கிட்டத்தட்ட கம்யூனிஸ்டாக இருப்பதற்குச் சமமாகவே கருதப்பட்டது; அல்லது குறைந்த பட்சம் சோவியத் ஆதரவாளராகப் பார்க்கப்பட்டது. எஃப்பிஜ பதிவுகளின்படி, மெக்சிகோவில் வசித்த அமெரிக்க வெளிநாட்டவரான பிரடெரிக் வண்டர்பில்ட் ஃபீல்டு (Frederick Vanderbilt Field) உடன் மர்லின் தொடர்பு களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இடதுசாரி கருத்துக் களால் அவரது செல்வந்த குடும்பம் அவரை நிராகரித் திருந்தது.

கருப்பின மக்களின் சமத்துவம்

வலதிலிருந்து இடது (From Right to Left) என்ற தனது சுயசரிதையில், ஃபீல்ட், மர்லினின் நீதி உணர்வு குறித்து எழுதியுள்ளார்: “குடிமக்கள் உரிமைகள், கருப்பின மக்களின் சமத்துவம் குறித்து தன்னுடைய வலுவான உணர்வுகளை அவர் எங்களிடம் கூறினார். சீனாவில் நடைபெற்று வந்த மாற்றங்கள் மீது அவர் கொண்டிருந்த பாராட்டையும், கம்யூனிஸ்ட் வேட்டையாடலுக்கும் மெக்கார்த்தியிசத்திற்கும் எதிரான அவரது கோபத்தையும், (எஃப்பிஜ) இயக்குநர் ஜே. எட்கர் ஹூவரின் மீது கொண்டிருந்த வெறுப்பையும் அவர் வெளிப்படுத்தினார்.” எஃப்பிஜ ஆவணங்களின்படி, மர்மமான அவரது மரணத் திற்கு சில மாதங்களுக்கு முன்பு, 1962 பிப்ரவரி 19-ஆம் தேதி, அவர் மெக்சிகோவுக்கு தனது கடைசி பயணத்தை மேற் கொண்டார்.

சந்தேகநபர் பட்டியல்: மற்றொரு காரணம்

மர்லின் மன்றோ எஃப்பிஜ-யின் “சந்தேக நபர் பட்டிய லில்” இடம்பிடிக்க மற்றொரு காரணம், முற்போக்குச் சிந்தனையாளர் மற்றும் நாடகாசிரியரான ஆர்தர் மில்லர் (Arthur Miller) உடனான அவரது நட்பு; பின்னர் அவர் மர்லினின் கணவராகவும் ஆனார். ஆவணங்களில் காணப்படும் காலக்குறிப்புகள் 1955-இல் தொடங்குகின்றன. அதுவே மன்றோவும் மில்லரும் காத லிக்கத் தொடங்கிய ஆண்டு. அப்போது மில்லர் தனது அரசியல் கருத்துக்களால் ஏற்கனவே கருப்புப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். 1956-இல், டெத் ஆப் சேல்ஸ்மேன் (Death of a Sales man) மற்றும் தி க்ருசிபிள் (The Crucible) போன்ற படைப்பு களால் புகழ்பெற்ற மில்லர், தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க முயன்றபோது, ஹவுஸ் அன் - அமெரிக்கன் ஆக்டிவிட்டீஸ் கமிட்டி (House Un-American Activities Committee) என்ற புகழ்பெற்ற விசாரணைக் குழுவால் ஆஜராகுமாறு அழைக் கப்பட்டார். 1960களின் தொடக்கத்தில், மர்லினுக்கு யுஎஸ்ஏ கம்யூ னிஸ்ட் கட்சி (Communist Party USA) உடன் எந்தத் தொடர் பும் இல்லை என்று எஃப்பிஜ உறுதியாக நம்பியது. எஃப்பிஜ முகவர் ஒருவர் ஜே.எட்கர் ஹீவர் (J.Edgar Hoover)க்கு எழுதிய கடிதத்தில்: “இந்த நபரின் கருத்துக்கள் மிகவும் தெளிவாகவும் உறுதி யாகவும் இடதுசாரி தன்மை கொண்டவை. இருப்பினும், அவர் கம்யூனிஸ்ட் கட்சியால் செயலில் பயன்படுத்தப் படுகிறார் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் இயக்கத்துடன் பணியாற்றுவோருக்கு அது பொதுவாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.

சமத்துவம், நீதி குறித்த அக்கறை

எஃப்பிஜ-இன் மர்லின் மீதான இந்த ஆவேசமான கவனம், அவர் ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திரங் களில் ஒருவராக இருந்ததாலேயே உருவானது. அமெரிக்கா விலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்த அவர், தனது சமூக-அரசியல் கருத்துக்களால் மக்களைப் பாதிக்கக்கூடியவராகக் கருதப்பட்டார்.

உண்மை என்னவென்றால், மர்லின் மன்றோ ஒரு கம்யூ னிஸ்ட் அல்ல; அக்கால கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவருக்கு எந்த உத்தியோகப்பூர்வ தொடர்பும் இல்லை. ஆனால் ஹாலி வுட் உருவாக்கிய “முட்டாள் பொன்னிறப் பெண்” என்ற பிம்பத்தின் பின்னால், சமத்துவம் மற்றும் நீதி குறித்த ஆழமான அக்கறை கொண்ட, உணர்வுப்பூர்வமான மற்றும் அறிவார்ந்த ஒரு பெண் இருந்தார்.

தொழிலாளர் வர்க்கக் குடும்பத்தில் பிறந்த அவர், முதலாளித்துவ அமைப்பின் கீழ் கடுமையான சுரண்ட லுக்கு உள்ளானவரே ஆவார். அந்த அமைப்பு அவரை ஒரு பாலியல் பொருளாகவும், “பணம் சம்பாதிக்கும் இயந்திர மாகவும்” நடத்தினது.

ஒருமுறை அவர் கூறியதாவது: “ஒரு நடிகை இயந்திரம் அல்ல. ஆனால் அவர்கள் உங்களை ஒரு இயந்திரம் போல நடத்துகிறார்கள் — பணம் உற்பத்தி செய்யும் இயந்திரமாக.” மிஸ் மேகஜின் (Ms. Magazine), ஆகஸ்ட் 1972-இல் மேற்கோள் காட்டப்பட்டது.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.