போர், விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தி முடங்கும் அபாயம்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>போர், விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தி முடங்கும் அபாயம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 21 - ஈரான் மீதான அமெரிக்கா போர், காரணமாக பெட்ரோலிய பொருட்கள் தொடர் விலை உயர்வு உள்ளிட்ட கார ணங்களால் திருப்பூரில் பின் னலாடை உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நெருக் கடியில் இருந்தும் ஏதோ ஒரு வகையில் மீண்டாலும், அடுத்தடுத்து புதிய நெருக் கடிகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பருத்தி நூல் விலை உயர்வு, கொரோனா கால முடக்கம் என கடந்து வந்த போதும், கடந்த 2025 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதம் விதித்தது பேரிடியாக மாறி யது. அதன் பிறகு வரி குறைக்கப்பட்டா லும், அதன் பாதிப்பிலிருந்து முழுமை யாக மீள முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள் ளிட்ட அறிவிப்புகள் செய்யப்பட்டாலும் அது உடனடியாக நடைமுறைக்கு வர வில்லை. இந்த நிலையில் ஈரான் மீது அமெ ரிக்கா, இஸ்ரேல் தன்னிச்சையாக தாக் குதல் நடத்தி அந்நாட்டின் உயர் தலைவரை கொலை செய்ததால் போர் தொடங்கி யுள்ளது. ஈரான் தற்காப்பு நடவடிக்கை யாக் மேற்காசியாவில் உள்ள அமெ ரிக்கா படைத்தளங்கள் மற்றும் இஸ் ரேல் மீது எதிர் தாக்குதல் நடத்தி வருகி றது. அத்துடன் ஹேர்மூஸ் நீர் இணையை ஈரான் கட்டுப்படுத்தி வரும் நிலையில், உலக நாடுகளுக்கான பெட் ரோல் கச்சா எண்ணெய் போக்குவ ரத்து நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள் ளது. கச்சா எண்ணெய் விலை அபரிமித மாக உயர்வதுடன், அதிலிருந்து தயா ரிக்கப்படும் பெட்ரோலிய உப பொருட் களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் சமையல் எரி வாயு விலை ₹60 மத்திய அரசால் உயர்த் தப்பட்டுள்ளது. வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் தொடர் விளைவாக பின்னலாடை உற்பத்தி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக திருப்பூரில் பருத்தி நூல் அடிப்படையிலான பின்னலாடை உற் பத்தியுடன் கடந்த 10 ஆண்டு காலமாக பாலிஸ்டர் அடிப்படையான பின்ன லாடை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடங்கிய உடனேயே பாலிஸ்டர் நூல் விலையை கிலோவுக்கு ரூ.30 அதிகரித்துள்ளனர். போர் தொடங்கி தற்போது மூன்று வாரங்கள் ஆன நிலையில் பாலிஸ்டர் நூல் விலை ரூ.42 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பாலிஸ்டர் நூல் விலை உயர்வு மட் டும் இன்றி, பாலிஸ்டர் மூலப்பொரு ளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பாலி பக் உள்ளிட்ட பேக்கிங் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இது தவிர பருத்தி நூலின் விளையும் அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் தொடக் கத்தில் பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 7 அதிகரித்தது. 15 ஆம் தேதி போல மேலும் 7, 8 ரூபாய் வரை அதிக ரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பருத்தி நூல் கிலோ ₹.15 வரை உயர்ந் துள்ளது. பருத்தி நூல் விலை உயர்ந்தாலும் கேட்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி நடைபெற வில்லை என்று நூற்பாலை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. பருத்தி நூல் விலை உயர்வுக்கு போர் காரணமாக இல்லை. மாறாக ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி வரை நூல் வழங்கு வதை நிறுத்திவிட்டதாகவும், முன்ப ணம் கொடுத்து புக்கிங் செய்பவருக்கு மட்டுமே நூல் வழங்க முடியும் என்றும் நூல் வர்த்தகர்கள் தெரிவித்தனர். மேலும் பெட்ரோலிய பொருட்களை மூலப் பொருளாக கொண்ட டைஸ் எனப் படும் சாயப் பொருட்கள் சாயம் ஏற்ற பயன்படுத்தப்படுகின்றன. இந்த சாயப் பொருட்களுக்கும் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சாயப் பொருட் கள் விலை உயர்வு காரணமாக சாயம் ஏற்றும் கட்டணத்தையும் சாய ஆலை உரிமையாளர் சங்கம் அதிகரித்துள் ளது. மூலப் பொருள் மற்றும் உப பொருட் கள் விலை உயர்வு காரணமாக உள் நாட்டு பனியன் ஆடை விலையையும் ஏழு சதவீதம் வரை உயர்த்தி சைமா சங் கம் அறிவித்துள்ளனர். அதேசமயம் ஏற் றுமதி ஆடை உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வுகளால், ஏற்கனவே கைவ சம் இருக்கும் ஆர்டர்களை உற்பத்தி செய்வதற்கு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும் கப்பல் போக்கு வரத்து கட்டணம், சரக்குகளை அனுப் பும் கண்டெய்னர் கட்டணம் ஆகியவை யும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இத்த கைய காரணங்களால், புதிய ஆர்டர் களை பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிலை நீடிக்கும் போது, மேற்காசிய போர் முடிவுக்கு வராவிட் டால், பின்னலாடை உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளதாக தொழில் துறையி னர் கூறினர். எப்போதும் சீராக இயங்கி வரும் ஏற்றுமதி நிறுவனங்கள் கூட ஒரு வாரம் வரை உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களை விடுமுறையில் அனுப்பியுள்ளனர். மேலும் சில நிறுவனங்கள் அடுத்த 10 நாட்களில் உற் பத்தியை நிறுத்தப் போவதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் முடங்கக்கூடிய சிக்க லான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றும தியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறிய தாவது: தற்போதைய நிலையில் நெருக் கடி தொடர்ந்து வருகிறது. கொரோனா காலத்தை போல் மாறிவிடும் சூழ்நிலை உள்ளது. போர் ஒருபுறம் என்றால், தேர்தல் நடைமுறை அறிவிக்கப்பட்டு விட்டதால், தொழில் நெருக்கடிக்கு யாரிடம் கோரிக்கை வைப்பது என்று தெரியவில்லை. எங்கள் கோரிக் கையை கேட்கும் நிலையில் யாரும் இல்லை. எனவே ஏற்கனவே இருக்கும் ஆர்டர்களை எப்படியாவது செய்து முடிப்பது, புதிய ஆர்டர்களை பெறுவ தில்லை என்ற நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார். அதேசமயம் திருப்பூரில் 30 ஆண்டு களுக்கு மேலாக நூல் வர்த்தகத்தில் ஈடு பட்டு வரும் கணேசன் என்பவர் கூறு கையில், மேற்காசியப்போர் தொடங்கு வதற்கு முன்பாகவே திருப்பூர் தொழில் மிக மோசமாக மாறி உள்ளது. ஏற்க னவே 20 சதவிகிதம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இப்போது போர் தொடரும் பட்சத்தில் இன்னும் நெருக் கடி அதிகரிக்கும் என்று வேதனையு டன் தெரிவித்தார். திருப்பூர் தொழில் துறையினர் பலரி டம் விசாரித்த போது தற்போதைய நிலை தொடரும் பட்சத்தில் அடுத்த ஓரிரு வாரங்களில் திருப்பூர் தொழில் உற்பத்தி முடங்கும் என்று கூறினர்.</p>
