தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘ஈரான் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும்’ பட்டமளிப்பு விழாவில் உலக அமைதியை வலியுறுத்திய எஸ்எப்ஐ மாணவர்!

18 Mar 2026, 3:34 pm
‘ஈரான் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும்’ பட்டமளிப்பு விழாவில் உலக அமைதியை வலியுறுத்திய எஸ்எப்ஐ மாணவர்!
<p><strong>&lsquo;ஈரான் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும்&rsquo; பட்டமளிப்பு விழாவில் உலக அமைதியை வலியுறுத்திய எஸ்எப்ஐ மாணவர்!</strong></p> <p>சேலம், மார்ச் 18 - கல்வி என்பது உலக அறிவைப் பெறுவது மட்டுமல்ல, உலகளாவிய நீதிக்காகக் குரல் கொடுப்பதும்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல், குறிப்பாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திவரும் கொடூர யுத்தம், &nbsp;உலக அமைதியை சீர்குலைப்பதாக உள்ளது. எண்ணெய் வளத்தைக் கைப்பற்றும் நோக்கில் நடத்தப்படும் இந்த யுத்தம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதோடு, உலகப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. &nbsp;இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பட்ட மளிப்பு விழா, சேலம் அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) நடை பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் கோகுல், தனது &nbsp;பட்டமளிப்புச் சான்றிதழ் கோப்பின் முன் பகுதியில் &ldquo;STOP WAR ON IRAN&rdquo; (ஈரான் மீதான போரை நிறுத்து) என்ற வாசகத்தை ஒட்டி, அமைதிக்கான செய்தியை முன்வைத்தார். மேடையில் சான்றிதழைப் பெறும்போதும், &lsquo;ஈரான் மீதான போரை நிறுத்து&rsquo; வாசகத்தை அனைவரின் பார்வைக்கும் கொண்டு சேர்த்தார். இந்தப் புகைப்படங்கள் சக மாணவர்கள் மத்தியிலும் வைரலாகி, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து கோகுல் கூறுகையில், &ldquo;கல்வி நிலையங்கள் அமைதியையும் மனிதநேயத்தையும் போதிக்கின்றன. ஆனால், இன்று உலக அளவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வெறும் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அல்ல; அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அமைதிக்கு எதிரானது. போர் என்பது அழிவை மட்டுமே தரும். குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் போருக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனால்தான், எனது வாழ்வின் முக்கிய நிகழ்வான பட்டம் பெறும் விழாவை, அமைதிக்கான செய்தியை பரப்புவதற்காக பயன்படுத்தினேன்,&rdquo; என்றார். வழக்கமாக கொண்டாட்ட நிகழ்வாக மட்டுமே இருக்கும் பட்ட மளிப்பு விழாவில், உலக அமைதியை &nbsp;வலியுறுத்தியது, இன்றைய தலை முறை மாணவர்கள் சமூகப் பொறுப்பு ணர்வுடன் உலக நடப்புகளைக் கவனித்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.