தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்காசியாவில் போர்: தமிழகத்திலிருந்து மாங்கூழ் ஏற்றுமதி பாதிப்பு,ரூ.2,000 கோடி இழப்பு!

13 Mar 2026, 4:52 pm
மேற்காசியாவில் போர்: தமிழகத்திலிருந்து  மாங்கூழ்  ஏற்றுமதி பாதிப்பு,ரூ.2,000 கோடி இழப்பு!
<p><strong>மேற்காசியாவில் போர்: தமிழகத்திலிருந்து &nbsp;மாங்கூழ் &nbsp;ஏற்றுமதி பாதிப்பு,ரூ.2,000 கோடி இழப்பு!</strong></p> <p>கிருஷ்ணகிரி,மார்ச் 13- மேற்காசியாவில் ஈரான் - இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பல பொரூட்கள் தேங்கி யுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டைகள் சவுதி அரேபியா, குவைத், கத்தார் நாடுக ளுக்கு செல்வது தடைபட்டுள்ளது. &nbsp;கிருஷ்ணகிரி மாவட்டத்த்தில் இருந்து மேற்காசியாவில் உள்ள நாடுக ளுக்கு &nbsp;மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்படு கிறது. கப்பல் மற்றும் விமான போக்கு வரத்து தடைபட்டுள்ளதால் மாம்பழ கூழ் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இத னால், ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டி ருப்பதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர். மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறு வடையாகும் தோத்தபுரி எனப்படும் பெங்களூரா, அல்போன்சா ரகத்தில் இருந்து மாங்கூழ் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா &nbsp;உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 2.10 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 மாங்கூழ் ஆலைகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இரு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா மற்றும் வளைகுடா நாடு களான துபாய், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு 3 &nbsp;லட்சம் டன்னும், உள்நாட்டில் 2 லட்சம் டன்னும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.3,500 கோடி அந்நியச் செலாவணியும், உள் நாட்டு வர்த்தகம் மூலம் ரூ.15,000 கோடியும் கிடைக்கிறது. இந்நிலை யில், ஈரான் மீதான அமெ- இஸ்ரேல் போர் தாக்குதல் தீவிர மடைந்துள்ளதால் ஏற்றுமதி செய்யப் பட மாங்கூழ் தேக்கம் அடைந்து ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மாங்கூழ் உற்பத்தி யாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பையூர் மாதவன் கூறியதாவது. ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங் களில் வெளிநாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதியாகும். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பழச்சாறு தேவை அதிகம் இருக்கும். இந்நிலையில், கடந்த 3 &nbsp;ஆண்டுகளாக ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலீஸ்தீனம் போர் மற்றும் செங்கடல் பிரச்சனையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஈரான் மீதான அமெரிக் கா, இஸ்ரேல் போர் தாக்குதல் தீவிர மடைந்திருப்பதால், மாங்கூழ் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, இலங்கை, சென்னை, &nbsp;தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் மாங்கூழ் ஆலைகளில் பல லட்சம் டன் மாங்கூழ் தேக்கம் அடைந்து உள்ளதால், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. &nbsp; மேலும், போர் காரணமாக ஒரு கன்டெய்னருக்கு 2,000 டாலர் போர் அபாயக் கூடுதல் கட்டணமாக வழங்க வேண்டும் என சர்வதேச வர்த்தக நிறு வனம் தெரிவித்துள்ளது. இதனால், மாங்கூழ் விற்பனை பெருமளவில் பாதி க்கப்பட்டுள்ளது. இதனால், மா கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு கொள்முதல் தொகை வழங்குவதிலும், தொழிலா ளர் களுக்கு ஊதியம், மின்கட்டணம், வங்கிக் கடன் செலுத்தவும் மிகுந்த சிர மத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள் ளது.ஏற்கெனவே, பல நாடுகளில் மா உற்பத்தியும், மாங்கூழ் உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில், ஆண்டு தோறும் ஏற்றுமதி சரிந்து வருகிறது. எனவே, மாங்கூழ் உற்பத்தியாளர் களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு டன்னுக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.