தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போரும் பெண்களும்! - ஜி.ராணி

7 Mar 2026, 2:36 pm
போரும் பெண்களும்! - ஜி.ராணி

போரும் பெண்களும்! - ஜி.ராணி

நெஞ்சை உலுக்கிய அந்தத் துயரம், காண்பவர் கண்க ளுக்கு ரத்த நாளங்களையே உறையச் செய்தது. ஆம், தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் ‘ஷஜரே தய்யிபா’ (Shajareh Tayyebeh — நல்ல மரம்) என்ற சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி மீது பிப்ரவரி 28, 2026 அன்று அந்த கொடிய சம்பவம் அரங்கே றியது. மினாப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்கு தலில் 165-க்கும் மேற்பட்ட குழந்தைகள் — பெரும்பாலும் 7 முதல் 12 வயது சிறுமிகள் — கொ டூரமான முறையில் கொல் பப்பட்டனர். 96-க்கும் மேற் பட்ட குழந்தைகள் பலத்த காய மடைந்தனர்.

நகர மேயரின் தகவல்படி, இப்பள்ளி மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப் பட்டது. இரண்டாவது தாக்குத லின் போது, பள்ளித் தலைமை யாசிரியர் மாணவர்களைப் பாதுகாப்பு கருதி பிரார்த்தனை அறையில் திரட்டியபோது, அந்த அறையே இலக்காகித் தகர்க்கப்பட்டது என்று நேரில் கண்ட பெற்றோர்கள் கதறலுடன் தெரிவித்தனர். அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ விசாரணை நடப்பதாகக் கூறினா லும், ஈரான் அரசு இதை அமெ ரிக்க-இஸ்ரேல் படைகளின் திட்ட மிட்ட தாக்குதல் எனச் சாடியுள்ளது. தலைமுறையைச்  சிதைக்கும் போர்: குரூப்ஸ்காயா காட்டும் உண்மை இந்தப் பேரழிவைத்தான் சோசலிசப் புரட்சியாளர்களில் ஒருவரான நதேழ்தா குரூப்ஸ்கா யா அன்றே எச்சரித்தார்.

போரை வெறும் நில ஆக்கிரமிப்பாகப் பார்க்காமல், அது தலைமுறை களை அழிக்கும் கல்வி மற்றும் சமூகப் பேரழிவு என்று வாதிட்ட அவர், “போரை முதலாளித்து வத்தின் தேவையாகவும், பெண் தொழிலாளிகளை அதிகம் பாதிக்கும் கருவியாகவும்” குறிப்பிட்டார். இன்று காசாவில் இதுதான் நடக்கிறது. ஐநா பெண்கள்(UN Women) எனும் அமைப்பின் மதிப்பீட்டின்படி, அங்கே 28,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட் டுள்ளனர். தி லான்செட் (The Lancet) இதழின்படி, காசாவில் உயிரிழந்தவர்களில் 59.1% பேர் பெண்கள் மற்றும் குழந்தை களே. சுமார் 19 லட்சம் மக்கள் (85%) இடம்பெயர்ந்துள்ள நிலையில், அதில் 10 லட்சம் பேர் பெண்கள்.

1,55,000 கர்ப்பிணிப் பெண்கள் கூடாரங்களில் வாழும் அவல மும், மயக்க மருந்து இன்றி  சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடப்பதும் மிகப்பெரிய துயர நிலைக்கு பெண்களைத் தள்ளி யுள்ளன. இங்கே போரினால் கருக்கலைப்பு விகிதம் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் பெரும் அபாயம்.  முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணி வணிகம்: ரோசா லக்சம்பர்க் இந்த அழிவுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை மகத்தான புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க் தனது ‘மூலதனக் குவிப்பு’ நூலில் தெளிவாக விளக்குகிறார். புதிய சந்தைக ளைக் கைப்பற்ற முதலாளித்துவ நாடுகள் ராணுவத்தைப் பயன் படுத்துவதாகக் கூறிய அவர், “போர் என்பது தொழிலாளர்க ளைக் கொன்று குவித்து முதலா ளிகளைச் செழிக்க வைக்கும் ஒரு வணிகம்; ராணுவ வாதம் என்பது சமூகத்தின் உழைப்பை உறிஞ் சும் ஒரு ஒட்டுண்ணி” என்றார். ரோசா குறிப்பிட்ட இந்த ‘வணிகம்’ இன்று பெண்களைத் திட்டமிட்ட இலக்காக்குகிறது.

2023-இல் மட்டும் ஆயுத மோ தல்களில் கொல்லப்பட்ட பெண்களின் விகிதம் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. போர்களில் கொல்லப்படும் 10 பேரில் 4 பேர் (40%) பெண்கள். ஒட்டு மொத்தமாக 33,443 பொதுமக்கள் பலியானதில், சுமார் 13,000-க்கும் மேற்பட்டோர் பெண்கள். உலகின் 67.6 கோடி பெண்கள் போர் மண்டலங்களுக்கு அரு கிலேயே வாழ்ந்து வருகின்றனர். போருக்கு எதிரான போர்: கிளாரா ஜெட்கின் குரல் 1914-இல் உலகப் பெண்ணு ரிமை இயக்கத்தின் முன்னோடி கிளாரா ஜெட்கின் “போருக்கு எதி ரான போர்” என்ற முழக்கத்தை முன்வைத்தபோது, போரினால் அதிகம் பாதிக்கப்படுவது உழைக்கும் வர்க்கத்துப் பெண்க ளும் குழந்தைகளுமே என்பதைச் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் படைகளால் ‘Comfort Women’ என்ற பெயரில் போர்க்களத்தில் ஆண் வீரர்களுக்கு இரையாக்கப்பட்ட  சீன, கொரியப் பெண்களும், நாஜிக்களால் வல்லுறவுக்கு ஆளான யூத, போலந்து, ரஷ்யப் பெண்களும் இதற்குச் சாட்சி. ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயப் பணிகளில் கட்டாயமாக அமர்த்தப்பட்ட பெண்கள், போர் முடிந்த பின் வேலையில் இருந்து வெளி யேற்றப்பட்டு, ‘ஒற்றைத் தாய் மார்களாக’ வறுமைக்குத் தள்ளப் பட்டனர். முறையான வருமான மும் நில உரிமையும் இல்லாத சூழலில், இன்றும் போர் மண்ட லத்தில் வசிக்கும் பெண்கள் கடும் வறுமைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

ஐநா-வின் 2025 அறிக்கை யின்படி, 2024-இல் மட்டும் 4,600-க்கும் மேற்பட்ட போர்-பாலியல் வன்முறைகள் பதிவாகி யுள்ளன. இது 2022 முதல் 87 சத வீத அதிகரிப்பாகும். பாதிக்கப் பட்டவர்களில் 92 சதவீதம் பேர் பெண்கள். போரை நிறுத்துங்கள் எனவே இன்று போர் எதிர்ப்புக் குரல் மேலும் வலுவாக ஒலிக்க வேண்டும். ஆனால், இந்தியா மவுனமாக இருந்து போரை ஆதரிப்பது போன்ற நிலை நீடிப்பது வேத னைக்குரியது. முதலாம் உல கப்போர் தொடங்கி இப்போது வரை போரினால் அதிகம் சிதைக்கப்படுவது பெண்களின் வாழ்வே. போர்கள் முடிவுக்கு வர வேண்டும் — அதுவே உலகின் பெண்களுக்கும் குழந்தைக ளுக்கும் நாம் செய்யும் உண்மை யான நீதி. அதற்காக வலுவாக குரல் கொடுப்போம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.