வக்பு திருத்தச் சட்டத்தை தவெக அரசும் அமல்படுத்தாது!
8 Jun 2026, 8:54 pm
<p><strong>வக்பு திருத்தச் சட்டத்தை தவெக அரசும் அமல்படுத்தாது!</strong></p><p> அமைச்சர் ஷாஜகான் உறுதி சென்னை, ஜூன் 8 - தமிழகத்தில் புதிய வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப் படவில்லை என்றும், இனியும் அமல் படுத்தப்படாது என்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெளிவுபடுத்தியுள்ளார். திங்களன்று ஜூன் 8ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்திலும் அமல்படுத்தப்படாது. புதிய வக்பு திருத்தச் சட்டம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். இந்தச் சட்டத்தை எதிர்த்த திமுக அரசின் கொள்கையையே தவெக அரசும் தொடர்ந்து பின்பற்றும். வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ள பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.</p>
