தெருவிளக்கு வசதி கேட்டு நடைபயணம்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>தெருவிளக்கு வசதி கேட்டு நடைபயணம்</strong></p>
<p>ஈரோடு, பிப். 24- அந்தியூர் அருகே தெரு விளக்கு வசதி செய்து தரக்கோரி நடைபயணத் திற்கு திரண்டவர்களிடம் வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட் டார். ஈரோடு மாவட்டம், அந்தி யூர் வட்டம், நகலூர் கிராமம், குண்டு மூப்பனூரை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு தெருவிளக்கு வசதி செய்வதற் காக மின்கம்பங்கள் நடப்பட்டது. ஆனால், அங்குள்ள பகுதியை ஆக்கிரமித்திருந்த ஆதிக்க சக்தியான முன்னாள் காவல் துறை அதிகாரி, பட்டியலின மக்களை தாக்கி மின் கம்பங்களை பிடுங்கி எறிந்தார். இவ்வாறான அத்துமீறலுக்குப் பிறகு மீண்டும் அளவீடு செய்யப்பட்டது. ஏற்கனவே மின்கம்பங்கள் நடப்பட்ட இடம் அருகே இருக்கும் நிலத் துக்கு சொந்தக்காரர் ஆக்கிரமிப்பு செய்தி ருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அள வீடு செய்து கல் நட்டபகுதியில் (பென்சிங்) கம்பிவேலை அமைக்க வேண்டும். அரசு நிலத்தில் உள்ள மரங்களை பதிவு செய்து (நம்பர் போட்டு) கொடுக்க வேண்டும். தெரு விளக்கு அமைக்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி நடைபயணம் செல்ல திட்ட மிடப்பட்டு, பொதுமக்கள் திரண்டனர். இதனையறிந்த அந்தியூர் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வ மாக உறுதியளித்தனர். இதனையடுத்து நடை பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது. இந்நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி, மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிசாமி, மாவட்ட துணைச்செயலாளர் டி.ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், ஊர் கொத்துக் காரர் பி.விஸ்வநாதன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
