நாட்டில் உருவான முன்னணி காலணி பிராண்டான வாக்கரூ, உலகப் புகழ்
17 Nov 2025, 4:40 pm
<p><strong>நாட்டின் முன்னிலை காலணி பிராண்டாக மாறிய வாக்கரூ</strong></p>
<p>சென்னை, நவ.17- நாட்டில் உருவான முன்னணி காலணி பிராண்டான வாக்கரூ, உலகப் புகழ் பெற்ற மார்க்கெட் ரிசர்ச் நிறுவனமான கேடன்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில், “இந்தியாவின் நம்பர் 1 PU காலணி பிராண்ட்” என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் நுகர்வோருடனான வாக்கரூவின் வலுவான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. வாக்கரூ நிறுவனர் நௌஷாத், கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையும், விநியோகஸ்ர்கள்,சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புமே இந்தச் சாதனைக்குக் காரணம் என்று கூறியுள்ளார். 2012-ல் தொடங்கப்பட்ட வாக்கரூ, இன்று இந்தியாவின் மிகப்பெரிய காலணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இது தினசரி 5 லட்சம் ஜோடி காலணிகள் தயாரிக்கும் திறன் கொண்டது. 700-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வாக்கரூ நகரங்கள் மற்றும் கிராமங்களில் எளிதில் சென்றடைகிறது. இதன் தயாரிப்புகள் குறைந்த விலையில் நுகர்வோரை சென்றடைகிறது. அதற்கு ஏற்ப அதன் தயாரிப்புகளின வடிவமைப்பு உள்ளது. வாக்கரூ அதே ஆய்வில், தென் இந்தியாவின் நம்பர் 1 காலணிப் பிராண்ட் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.</p>
<p>துறைமுகம் பகுதி ஜட்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழ்விட உரிமை நடை துண்டறிக்கை பிரச்சாரம் நடைபெற்றது. அந்தோணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
