வாலாஜாபேட்டை பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
21 Jun 2026, 2:12 am
<p><strong>வாலாஜாபேட்டை பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூன் 20 – வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பகுதியில் இயங்கி வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாண வர்கள் வகுப்பறைக்கு வெளியில், பள்ளி வளாகத்தில் உள்ள மண் தரையில் அமர்ந்து பாடம் பயிலும் அவல நிலை காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளி வளா கத்தைச் சுற்றி அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களில் இருந்து விஷப்பூச்சிகள், ஊர்வன மற்றும் வண்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இத்தகைய ஆபத்தான சூழலில், மாணவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி திறந்தவெளியில் தரையில் அமர வைக்கப்படுவது பெற்றோர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான், இதே மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைக்குள் இருந்த மாணவி ஒரு வரை விஷப்பூச்சி கடித்ததில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய சம்பவம் அரங்கேறியது. வகுப்பறைக்குள்ளேயே இந்த நிலை என்றால், திறந்தவெளி மண் தரையில் அமரும் மாணவர்களின் பாது காப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. மழைக்கால பாதிப்புகள் மற்றும் பூச்சித் தொல்லைகளில் இருந்து மாணவர்களின் நலனைப் பேணிக் காக்க வேண்டியது அவசியமாகும். எனவே, மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடியாக தலையிட்டு வன்னிவேடு அரசு பள்ளி மாணவர்களுக்குப் பாது காப்பான வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
