முந்தய பக்கம்

பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்திடுக

8 Jul 2026, 10:08 pm
பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்திடுக

பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்திடுக

கோவை, ஜூலை 8- கூட்டுறவு சங்க கடன் களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஆழியாரில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கோவை மாவட்டம், ஆழியாரில் செவ்வாயன்று நடை பெற்றது. மாநிலத் தலைவர் ஏ.விஜய முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் பழனிச் சாமி வரவேற்றார். இதில், உரித்த தேங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், உரிக்காத தேங் காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொப்ப ரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 180 விலை நிர்ணயம் செய்திட வேண்டும். அரசே முழுவ துமாக கொள்முதல் செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் மீது ஒன்றிய பாஜக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் விரிவுபடுத்தப்பட வேண் டும். அதன் ஊழியர்களும், கள ஆய்வாளர்க ளும் கூடுதலாக்கப்பட வேண்டும். தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் வலியு றுத்தியது போல் கூட்டுறவு சங்க கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலா ளர் ப.துளசி நாராயணன், மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாநில நிர் வாகிகள் எம்.கருணாகரன், டி.ஜி.கோபிநாத், காளப்பன், வி.ஆர்.பழனிசாமி உட்பட மாநி லக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram