திருப்பத்தூரில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
26 Feb 2026, 5:09 pm
<p><strong>திருப்பத்தூரில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2-வது நாளாகக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காலி பணியிடங்களை நிரப்புதல், கருணை அடிப்படையில் 25 சதவீத வேலைவாய்ப்பு மற்றும் பணியாளர்களுக்குச் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமால், சற்குணகுமார், முரளிவாணன், சுந்தரமோகன், சர்தார், அரசு ஊழியர் சங்க பொருளாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
