விழுப்புரம் சிபிஎம் அலுவலகத்திற்கு விசிக வேட்பாளர் வன்னியரசு வருகை
3 Apr 2026, 6:05 pm
<p><strong>விழுப்புரம் சிபிஎம் அலுவலகத்திற்கு விசிக வேட்பாளர் வன்னியரசு வருகை</strong></p>
<p>விழுப்புரம், ஏப்.3- விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வருகை தந்து ஆதரவு திரட்டினார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில், திண்டிவனம் (தனி) தொகுதி மதச்சார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி யின் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு போட்டி யிடுகிறார். அவர் வெள்ளிக்கிழமை அன்று விழுப்புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து நிர்வாகிகளைச் சந்தித்தார். அவரை முன்னாள் எம்.எல்.ஏ ஆர். ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் மற்றும் மாவட்டச் செயற்குழு, இடைக்குழு, மாவட்டக் குழு நிர்வாகிகள் திரளாக வரவேற்றுத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.</p>
<p> </p>
