மருத்துவ அவசரநிலை விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
28 Sept 2026, 1:00 am
<p><strong>மருத்துவ அவசரநிலை விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்</strong></p><p>சென்னை, செப். 27-உலக இதய தினத்தை முன்னிட்டு, வி.எஸ். மருத்துவமனை சார்பில் ‘எமர்ஜென்ஸினா முதல்ல வி.எஸ்’ என்ற அவசர மருத்துவ விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்படடுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டையில் 4கி.மீ. தூரத்திற்கான விழிப்புணர்வு நடைபயணம் ஞாயிறன்று (செப்.27) நடைபெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு கொடியசைத்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர்ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், அவசர மருத்துவஉதவிக்காக 044-6969-8000 என்ற பிரத்யேக தொடர்புஎண்ணையும் மருத்துவமனை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாரடைப்பு, பக்கவாதம், நரம்பியல் பாதிப்புகள் மற்றும் விபத்துகள் போன்ற அவசரநிலைகளில் தாமதமின்றி சரியான மருத்துவ உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.</p>
