நேரடி கொள்முதல் நிலையங்களில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் விவசாயிகள் வேதனை
24 Sept 2026, 2:04 am

நேரடி கொள்முதல் நிலையங்களில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் விவசாயிகள் வேதனை

விருத்தாசலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.

கடலூர்,செப்.23-விருத்தாசலம் அருகே மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல் மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் மழையில்நனைந்து முளைத்து 20,000 மூட்டைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மு. அகரம்,முகாசபரூர், பட்டி, கோனான்குப்பம், எடச்சித்துர், கர்நத்தம், மங்கலம்பேட்டை, பூவனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவைத்த குருவை நெல் அறுவடை செய்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் கடந்தஒரு மாதமாக முறையாக இந்த அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் காலம்தாழ்த்திவந்துள்ளனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரு தினங்களாகபெய்த மழையில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து சேதம் அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். இந்த நெல்லை மீண்டும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்என்றால் இதனை காய வைத்து உலர்த்தினால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.நெல்லை உலர்த்துவதற்கான வசதியும் இல்லாததால் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் குடோனுக்கு எடுத்துச் செல்லாததால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்அடைந்துள்ளது. விவசாயிகள் மற்றும்கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் 20,000 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. இதற்குக் காரணம் அரசு அதிகாரிகள் அலட்சியப் போக்கு என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் கூறுகையில், நெல் மழையில் நனைந்ததற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே முழு காரணம். நெல் ஈரப்பதம் அதிக அளவுஇருந்தாலும் அதனை கொள்முதல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நெல் கொள்முதலுக்கு கொண்டுவரும் விவசாயிகளுக்கு அரசு சார்பாக தார்ப்பாய்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிரந்தர நெல் கொள்முதல்நிலையங்கள் அமைத்து மழையில்நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். - வ.சிவபாலன்