முந்தய பக்கம்

தோழர் வி.பி.சிந்தன் நினைவு மருத்துவ முகாம்

11 May 2026, 12:21 am
தோழர் வி.பி.சிந்தன் நினைவு மருத்துவ முகாம்
<p><strong>தோழர் வி.பி.சிந்தன் நினைவு மருத்துவ முகாம்</strong></p><p>சென்னை, மே 10 - தோழர் வி.பி.சிந்தன் 39ஆவது நினைவு தின மருத்துவ முகாம் ஞாயி றன்று (மே 10) கிண்டியில் உள்ள சிஐடியு தென்சென்னை மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர். மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து, மருத்துவ ஆலோசனையும் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் அரங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் எஸ்.காசி, தங்கசாமி, சரண்யா, பாரதிராமன், டௌலின், ஐஸ்வர்யா, தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ் சுந்தர், வாசு உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம், செயலாளர் ஜி.செந்தில்குமார், பொருளாளர் ஏ.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram