தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழைக்கும் வர்க்கத்தின் பேராசான் வி.பி.சிந்தன் நினைவு தினம்

9 May 2026, 2:17 am
உழைக்கும் வர்க்கத்தின் பேராசான் வி.பி.சிந்தன் நினைவு தினம்

உழைக்கும் வர்க்கத்தின் பேராசான் வி.பி.சிந்தன் நினைவு தினம்

சேலம், மே 8- தன் வாழ்நாள் முழுவதும், தொழி லாளி வர்க்கத்தின் விடியலுக்காக கள மாடிய ஒப்பற்ற தொழிற்சங்கத் தலை வர், தோழர் வி.பி. சிந்தன் அவர்களின் 39-ஆவது நினைவு தினம் வெள்ளியன்று (மே8) கடைபிடிக்கப்பட்டது.

செங் கொடி இயக்கத்தின் சமரசமற்ற போரா ளியான அவரது நினைவைப் போற்றும் வகையில், சேலத்தில் தொழிலாளர்கள் ரத்ததானம் வழங்கி உணர்ச்சிகரமாக அஞ்சலி செலுத்தினர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிஐடியு மாவட் டக்குழு அலுவலகமான ’வி.பி.சி நினை வகத்தில்’ இந்த ரத்ததான முகாம் நடை பெற்றது.

அரசு மோகன் குமாரமங்க லம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை ரத்த வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமிற்கு சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித் தனர்.

உழைக்கும் மக்களின் குருதியை உறிஞ்சும் சுரண்டல் முறைக்கு எதிராக குரல் கொடுத்த தலைவரின் நினைவாக, நோயாளிகளின் உயிர் காக்க எங்களது குருதியை கொடையாக வழங்குகி றோம் என்ற உணர்வுடன் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்க ளும், தொழிலாளர்களும் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவர் ரவீந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாவட்ட துணைத் தலை வர்கள் எஸ்.கே. தியாகராஜன், ஆர். வெங்கடபதி, பி. பன்னீர் செல்வம் மற் றும் மாவட்ட நிர்வாகிகள் சி. கருப்பண் ணன், திலீப் மேனன், சி. உதயகுமார், பி. முருகேசன், ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.

சிந்தனையில் உறுதி, செயல்பாட் டில் வேகம் எனத் திகழ்ந்த வி.பி.சி-யின் நினைவாக நடைபெற்ற இந்த ரத்ததான முகாம், தொழிலாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.