தோழர் விபி.சிந்தன் நினைவு ரத்ததானமுகாம்
10 May 2026, 1:35 am
<p><strong>தோழர் விபி.சிந்தன் நினைவு ரத்ததானமுகாம் </strong></p><p>சிஐடியு ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் விபி.சிந்தன் 39 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி குடியாத்தம் வடகுளக்கரையிலிருந்து ஊர்வலம் துவங்கி பஜார் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிபிஎம் நகர செயலாளர் வே.குபேந்திரன் தலைமை தாங்க, சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர் செம்மலர், நகரகுழு உறுப்பினர்கள் முருகானந்தம், பாபு, லெனின், யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
