தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘புரட்சிக்கு விசுவாசமாக இருங்கள்’ என நெறிப்படுத்தியவர் தோழர் வி.பி.சிந்தன் சிலை திறப்பு விழாவில் தலைவர்கள் புகழாரம்

18 Aug 2026, 12:53 am
‘புரட்சிக்கு விசுவாசமாக இருங்கள்’ என நெறிப்படுத்தியவர் தோழர் வி.பி.சிந்தன்  சிலை திறப்பு விழாவில் தலைவர்கள் புகழாரம்

‘புரட்சிக்கு விசுவாசமாக இருங்கள்’ என நெறிப்படுத்தியவர் தோழர் வி.பி.சிந்தன் சிலை திறப்பு விழாவில் தலைவர்கள் புகழாரம்

சென்னை, ஆக. 17-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர் பகுதிக்குழு சார்பில், தொழிலாளர்களின் ஆசான் தோழர் வி.பி.சிந்தன் சிலை மற்றும் படிப்பகம் திறப்பு விழா பகுதிச்செயலாளர் ஆர்.கோபிதலைமையில் ஞாயிறன்று (ஆக.16) நடைபெற்றது.

விழாவில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தோழர் வி.பி.சிந்தன் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். மேலும், சிஐடியுஅகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் நூலத்தை திறந்து வைத்து உறுப்பினர் அட்டையைவழங்கினார்.விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், தமிழ்நாட்டின்ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன்என்று புகழாரம் சூட்டினார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த அனைத்து மனுக்களையும் தொகுத்து அரசிடம்கோரிக்கை வைப்பதோடு, மனு அனுப்பியவர்களுக்கும் அஞ்சல் அட்டை மூலம் தகவல் தெரிவித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்தவர் என்று குறிப்பிட்டார். காலையில் வீட்டை விட்டுப் புறப்பட்டால் இரவு எப்போது திரும்புவார் என்றே தெரியாதஅளவுக்குகட்சிக்காகவும், தொழிற்சங்கப் பணிகளுக்காகவும், தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவும் தன் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிட்டஅவர் ஒரு தசாவதானி என்று பெருமிதத்துடன் கூறினார்.

அனைத்துப் பகுதி தொழிலாளர்களாலும், அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக விளங்கிய வி.பி.சிந்தன், கடுமையான வேலைப்பளுவுக்கு நடுவிலும் சென்னை நகரம் முழுவதும் சிஐடியு இயக்கத்தைதொழிலாளி வர்க்கத்தின் கோட்டையாக மாற்றியவர் என்றார். தொழிற்சங்கத்தலைவராக மட்டுமின்றி,அரசியல் வகுப்பெடுப்பதிலும், பொதுக்கூட்டங்களில் பொதுமக்களைத் தட்டி எழுப்புவதிலும் திறமை படைத்த முழுமையான புரட்சிக்காரராக அவர்ிகழ்ந்தார் என்றும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எப்போது பிரச்சனை என்றாலும் நேரம் காலம் பார்க்காமல் உடனடியாகக் களத்தில் நின்றுஅவர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றவர் என்றும் பெ.சண்முகம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அ.சவுந்தரராசன், சிம்சன், டிவிஎஸ், எம்.ஆர்.எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில்வெடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டங்களில் ரத்தமும் சதையுமாக நின்று இயக்கத்தை நெறிப்படுத்தியவர் வி.பி.சிந்தன் என்று குறிப்பிட்டார். ஆளும் வர்க்கத்தின்அடக்குமுறைகளையும் கத்திக்குத்துகளையும் தாண்டி, “யாருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம். புரட்சிக்கு விசுவாசமாக இருங்கள்” என்ற தாரக மந்திரத்துடன் தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்திய அவரது பாரம்பரியத்தைஅனைவரும் உயர்த்திப் பிடித்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்றார்.

விழாவில் சிலையை வடிவமைத்த க.பிரபாகரன், ‘சகானாவின் வேர்கள்’ நூலை எழுதிய தீபாஜெயபாலன், தோழர்கள்பி.என்.உண்ணி, சி.சுந்தரராஜ், சு.பால்சாமி, சு.லெனின்சுந்தர் குடும்பத்தினர்உள்ளிட்டோருக்கு பெ.சண்முகம், அ.சவுந்தரராசன் மற்றும் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கிப் பாராட்டினர். முன்னதாக பகுதிக்குழு உறுப்பினர் க.உதயாவரவேற்க, எம்.பகத்சிங் நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன்,அ.விஜயகுமார், எஸ்.வி.வேணுகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், நிர்வாகிகள் பா.மகாலட்சுமி,வி.கிருஷ்ணசாமி, என்.நர்மதா, யாகோப், சி.ஆனந்த், எஸ்.எஸ்.கணேஷ்ராவ், டி.கே.சம்பத்ராவ், பி.மாரியப்பன்(சிபிஐ),சௌ.சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.