வர்க்க ஒற்றுமையை முன்னிறுத்தி தொழிலாளர்களை அணி திரட்டுவோம் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின கூட்டத்தில் தலைவர்கள் அறைகூவல்
8 May 2026, 10:07 pm

வர்க்க ஒற்றுமையை முன்னிறுத்தி தொழிலாளர்களை அணி திரட்டுவோம் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின கூட்டத்தில் தலைவர்கள் அறைகூவல்

சென்னை, மே 8- வர்க்க ஒற்றுமையை முன்னிறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டுவோம் என்று தோழர் வி.பி.சி. நினைவு தின கூட்டத்தில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

தொழிற்சங்க மூத்த தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிஐடியு, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளியன்று (மே8) மவுன ஊர்வலம் நடை பெற்றது.

சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி ஓட்டேரி யில் உள்ள அவரது நினைவிடம் வரை நடைபெற்றது.

அவரது நினைவிடத் தில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன், வட சென்னை மாவட்டத் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செய லாளர் வி.குப்புசாமி, பொருளாளர் மா.பூபாலன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முரு கேஷ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் எம்.ராம கிருஷ்ணன், ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறு முக நயினார், பொருளாளர் சசிகுமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசுகையில், தியாகம், துணிவு, அர்ப்பணிப்பு இது போன்ற எல்லா வற்றுக்குமான ஒரு மனித உருவம் தான் தோழர் வி.பி.சிந்தன்.

அப்படித் தான் அவருடைய வாழ்க்கை இருந்தது. வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே கழிந்த ஒரு வாழ்க்கை.

தொடர்ந்து அடக்குமுறை, இடைவிடாத அடக்குமுறை, அதை முழுவதையும் எதிர்கொள்ள நேர்ந்தது அவருடைய வாழ்க்கை.

ஏழை தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள் தொடங்கி எல்லா தரப்பு உழைப்பாளர்களுக்காகவும் அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

அவர்களை கம்யூனி ஸ்டுகளாக மாற்றுவதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.

தொழிற்சங்க இயக்கத்தை உரு வாக்குவதற்கு சென்னைக்கு அவர் அனுப்பப்பட்ட பிறகு, தமிழகத்தின் பெரிய தொழில் மையமாக சென்னை இருந்தது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் சென்னை, கோயம் புத்தூர், மதுரையில் இருந்தது.

அந்த தொழிற்சாலைகள் நிர்மானத்தின் போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருந்தார்கள்.

இப்போது மணலியில் இருக்கும் எல்லா ரசாயனத் தொழிற் சாலைகளும் அப்போது வந்ததுதான்.

ஒப்பந்தத் தொழிலாளர்களை திரட்டு வதில் இருந்து எல்லா விஷயங்க ளிலும் நிர்வாகத்தோடு, அரசோடு, காவல் துறையோடு மோத வேண்டி யிருந்தது.

பொதுத்துறை நிறுவனங் களில், தனியார் தொழிற்சாலைகள் என்ற வித்தியாசம் இல்லாமல் சங்கம் அமைத்தால் தாக்குதலுக்கு ஆளாக நேர்ந்தது.

சென்னை தொழிலாளி வர்க்கத்தின் வலுவான நகரமாக இருந்தது என்றால் அது மிகையல்ல.

எப்போதும் போராட்டங்கள், கிளர்ச்சி கள் நடந்துகொண்டே இருக்கும்.

தொழிலாளர்களின் உணர்வின் எதிரொலியாக கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் இருந்தார்கள். மார்க்சி ஸ்டுகள் தான் சென்னை நகர தொழிற் சங்க இயக்கத்திற்கு ஒரு வீரியம் கொடுத்தவர்கள்.

நிறுவனத்தை எதிர்த்து, மூலதனத்தை எதிர்த்துப் போராடும் துணிவை உருவாக்கி னார்கள்.

போராட்டத்தை எப்படி நடத்துவது, எப்படி ஒழுங்குபடுத்து வது என்பதை அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

போராட்டம் வெற்றி யில் முடிய வேண்டும்.

தொழிலா ளர்களுக்கு சிலவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் உறுதி யாக நின்று அதை ஒழுங்குபடுத்திய மிகப்பெரிய சிந்தனையாளர், தத்துவவாதி தோழர் வி.பி.சி. என்றால் மிகையல்ல.

தொழிலாளி வர்க்கம், யார் தலைமை தாங்கினாலும் ஒன்றுபட வேண்டும் என்ற அந்த ஒற்றுமை முழக்கத்தை முன்வைத்தார்.

அந்தத் தேவை என்பது இன்றைக்கு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

நமது வர்க்கம், நமது வர்க்கத்திற்கான போராட்டம் என்ற அந்த உணர்வோடு, ஒரு பொதுப் பார்வையோடு பார்ப் பது என்பதுதான் மிக மிக அடிப்படை யானது.

அதை இப்போது நாம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

ஏனென்றால் நிரந்தரத் தொழிலாளர் கள் என்ற நிலை மாறி அனைத்து துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

அதனால்தான் சிஐடியு நிரந்தர தொழி லாளர்கள், ஒப்பந்தத் தொழிலா ளர்களை திரட்டும் பொறுப்பை நிறை வேற்ற வேண்டும், அது சங்கத்தின் கடமை என்று அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.

எனவே வர்க்க ஒற்றுமையை முன்னிறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டுவோம் என்றார்.

ஏ.கே.பத்மநாபன் சிஐடியு மூத்த தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், சென்னை மாநகரத்தின் அல்லது தமிழகத்தின் ஒப்பற்ற தலை வராக தோழர் வி.பி.சிந்தன் உயர்வ தற்கு காரணம் வெள்ளை ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டம்.

பள்ளிப் பருவத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் ஊழியராக மாறி, அதிலிருந்து விடுதலை போராட்ட வேட்கையோடு செயல் பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த இயக்கத்தால் சுதந்திரத்தின் முழு இலக்கையும் அடைய முடியாது என்று அவரும் அவருடைய குடும்பமும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.

சிந்தன் சகோதரி தோழர் வி.பி.தேவகி கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மிகச்சிறந்த பேச்சாளராக 40ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத் தின் முதல் செயலாளர் தோழர் கிருஷ்ணபிள்ளை, சிந்தனை அழைத்து நீ சென்னைக்கு புறப்பட வேண்டும் என்று சொல்கிறார்.தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் தொடங்கியது அவரது பணி.

பின்னர் சென்னை வந்த அவர் கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக இங்கே தொழி லாளர்களை திரட்டினார்.

விடுதலை க்கு முன்னும், விடுதலைக்குப் பிறகும் சிறைகளில், கொட்டடிகளில் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளானார்.

சென்னை நகரத்தின் தொழிலாளர்கள் எழுச்சி யின் களநாயகராக மாறியவர் தோழர் வி.பி.சிந்தன்.

இன்று ஆயிரக்கணக்கான சவால்கள் நம்மை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு தொழிலாளி வர்க்க இயக்கத்தை, தொழிலாளி வர்க்கக் கட்சியை, தொழி லாளி வர்க்கத்தின் அரசியல் இயக்க த்தை வலுவாக உருவாக்குவதும், தொழிற்சங்க இயக்கத்தை, தொழி லாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வலு வாகக் கட்டுவதும், இதர தொழிலாளி வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தி இன்றைக்கு வரக்கூடிய வகுப்புவாத சவால்களை முறியடிக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

தோழர் வி.பி.சிந்தன் லட்சியத்தை நிறை வேற்றும் பணியை தொடர்ந்து வலு வாக முன்னெடுப்போம் என்றார் ஏ.கே. பத்மநாபன்.