தோழர் வி.பி.சிந்தன் நினைவு ரத்ததான முகாம்
11 May 2026, 1:39 am
<p><strong>தோழர் வி.பி.சிந்தன் நினைவு ரத்ததான முகாம்</strong></p><p>சென்னை, மே 10 – தொழிற்சங்க இயக்க முன்னோடி தோழர் வி.பி.சிந்தன் 39 ஆம் ஆண்டு நினைவு தின ரத்ததான, உடல்தான விழிப்புணர்வு முகாம் ஞாயிறன்று (மே 10) நடைபெற்றது. அமைந்தகரையில் உள்ள சிஐடியு மத்திய சென்னை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், சிஐடியு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர். உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதிமொழி படிவங்களை பலரும் பூர்த்தி செய்து வழங்கினர். சிஐடியு மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ், பொருளாளர் பி.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
