முந்தய பக்கம்

பொம்மை துப்பாக்கியுடன் வாக்குசேகரிப்பு!

21 Mar 2026, 2:42 pm
பொம்மை துப்பாக்கியுடன் வாக்குசேகரிப்பு!
<p><strong>பொம்மை துப்பாக்கியுடன் வாக்குசேகரிப்பு!</strong></p> <p>நாமக்கல், மார்ச் 21- நாமக்கல்லில் அகிம்சா சோசலிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் ரமேஷ் என்பவர், பொம்மை &nbsp;துப்பாக்கியுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. ஏப்.23 ஆம் தேதியன்று நடைபெற வுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரமேஷ் 13 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெள்ளியன்று வெளியிட்டார். அதில், மகளிர் பாதுகாப்பை உறுதி செய் யும் வகையில். உரிமத்துடன் கூடிய கைத்துப் பாக்கி இலவசமாக வழங்கப்படும் என்ற &nbsp;அறிவிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி உயிருக்கு ஆபத்தில்லாத வகை யில், முட்டிக்குக் கீழே மட்டுமே தாக்கும் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். நாமக்கல் மலைக் கோட்டை குளக்கரை திடலிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பொம்மை கைத்துப்பாக்கியுடன் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். இவர் ஒவ்வொரு தேர்த லின் போதும் வித்தியாசமான முறையில் வாக் காளர்களை கவரும் வகையிலும், பொது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகி றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram