விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 7 தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டது
25 Mar 2026, 5:29 pm
<p><strong>விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 7 தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டது</strong></p>
<p>விருதுநகர், மார்ச் 25- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்ட மன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறை களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் இருந்து 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்தத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜ பாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளன. மொத்தமுள்ள 7 சட்டமன்றத் தொகுதி களுக்கும் 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள், 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 2,596 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் தொகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப் பட்டன. பின்னர், இராஜபாளையம் தொகு திக்கான எந்திரங்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், திரு வில்லிபுத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தி லும், சாத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவல கத்திலும், சிவகாசியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், விருதுநகரில் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருச்சுழி தொகுதிக்கு காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை யினரின் பாதுகாப்பில் 24 மணி நேரம் செயல்படும் கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மேலும் இதில், மாவட்ட வருவாய் அலு வலர் ஆனந்தி, நேர்முக உதவியாளர் சோம சுந்தர சீனிவாசன், வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
